ஒரே சார்ஜில் 175 கிமீ ரேஞ்ச்.. 50,000 கிமீ வாரண்டியுடன் அறிமுகமான புதிய TVS iQube S! விலை எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


இந்திய எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் தனது நிலையை மேலும் வலுப்படுத்தும் வகையில், TVS நிறுவனம் புதிய iQube S மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. நீண்ட தூர பயணம், மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் சக்திவாய்ந்த பேட்டரி வசதியுடன் இந்த புதிய மாடல் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

புதிய TVS iQube S மாடலில் 4.7 kWh திறன் கொண்ட லித்தியம்-அயன் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. முந்தைய 3.5 kWh வேரியண்ட்டை விட இது அதிக திறன் கொண்டதாகும். ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 175 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஸ்கூட்டரில் 4.4 kW உச்ச சக்தி வழங்கும் ஹப் மவுண்டட் BLDC மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது 140 Nm டார்க் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இதனால் நகர்ப்புற சாலைகள் மட்டுமல்லாமல் மேடான பாதைகளிலும் சீரான பயண அனுபவம் கிடைக்கும்.

வேகத்தைப் பொறுத்தவரை, இந்த ஸ்கூட்டர் மணிக்கு 82 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டது. மேலும், 0 முதல் 40 கிமீ வேகத்தை வெறும் 4.3 விநாடிகளில் எட்டிவிடும்.

சார்ஜிங் வசதியில், போர்ட்டபிள் சார்ஜர் மூலம் 4 மணி நேரத்தில் 80% வரை சார்ஜ் செய்ய முடியும். IP67 தரச்சான்று பெற்ற பேட்டரி என்பதால், தூசி மற்றும் நீர் தாக்கத்திலிருந்தும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அம்சங்களாக முன்புறத்தில் டிஸ்க் பிரேக், பின்புறத்தில் டிரம் பிரேக், மேலும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் வசதிகளில், 17.78 செ.மீ TFT டிஸ்ப்ளே, ஜாய்ஸ்டிக் கட்டுப்பாடு, நேவிகேஷன், கால் மற்றும் SMS அலெர்ட்கள், ஆன்டி-தெஃப்ட், க்ராஷ் அலெர்ட் உள்ளிட்ட 118-க்கும் மேற்பட்ட ஸ்மார்ட் அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், Alexa voice support மற்றும் Reverse Mode வசதிகளும் உள்ளது.

பயன்பாட்டு வசதிக்காக சீட்டுக்கடியில் 32 லிட்டர் சேமிப்பு இடம் வழங்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு ஹெல்மெட்கள் வரை வைக்க முடியும். கூடுதலாக USB சார்ஜிங் போர்ட்டும் உள்ளது.

இந்த புதிய iQube S மாடல் Magnificence Purple, Harlequin Blue, Mercury Grey என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

இந்த ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,37,142 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பேட்டரிக்கு 50,000 கிலோமீட்டர் வரை வாரண்டி வழங்கப்படுகிறது.

மேலும், TVS SmartXonnect மொபைல் செயலி மூலம் பேட்டரி நிலை, கடைசியாக நிறுத்திய இடம், சர்வீஸ் நினைவூட்டல்கள் போன்ற தகவல்களை நேரடியாக மொபைலில் தெரிந்துகொள்ளலாம்.

மொத்தத்தில், புதிய TVS iQube S, இந்திய சந்தையில் ஏற்கனவே இருக்கும் Ather 450X, Ola S1 Pro, Bajaj Chetak போன்ற பிரீமியம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு நேரடி போட்டியாளராக பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

175 km range on a single charge New TVS iQube S launched with 50000 km warranty Do you know how much it costs


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->