தொடர் சரிவில் தங்கம் விலை - இன்றைய விலை நிலவரம் இதோ.!! - Seithipunal
Seithipunal


தொடர் சரிவில் தங்கம் விலை - இன்றைய விலை நிலவரம் இதோ.!!

மக்களின் வாழ்க்கையில் முக்கியமான ஒன்றாக தங்கம் உள்ளது. குழந்தை பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தேவையானதாக உள்ளது. இதற்கிடையே தமிழகத்தில் தங்கத்தின் விலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இதனால், மக்கள் ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையை எதிர்பார்க்கின்றனர். அந்த வகையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் குறித்து காண்போம். 

நேற்று சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 58 ரூபாய் குறைந்து 5580 ரூபாய்க்கும், சவரன் ஒன்று 464 ரூபாய் குறைந்து 44,640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து 5570 ரூபாய்க்கும், சவரன் ஒன்று 80 ரூபாய் குறைந்து 44,560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், வெள்ளி விலை கிராம் ஒன்று 77.70 ரூபாயாகவும் கிலோ ஒன்று 77,700 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

05 06 2023 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->