பேஸ்புக், வாட்ஸ்-அப்பில் கள்ள தொடர்பு: மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கணவனின் அதிர்ச்சி வாக்குமூலம்.!!
தன்னுடைய மனைவி வேறு ஒரு நபருடன் பேஸ்புக், வாட்ஸ்-அப் தொடர்பில் இருந்ததால், மனைவியை கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
சேலம் மாவட்டம் தம்பம்பட்டியை சேர்ந்த கணேஷ் மற்றும் மேகலாவுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 7 வயதில் பெண் குழந்தை இருக்கிறது.
தற்போது தனது மனைவி மேகலாவை கொலை செய்த வழக்கில் கணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறைக்கு கணேஷ் கொடுத்த வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-
எங்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக 4 வருடங்களாக பிரிந்துள்ளோம்.
இருந்தாலும் அடிக்கடி நாங்கள் சந்தித்து கொள்வோம். மேகலா நர்ஸிங் படிக்க
நான்தான் பணம் கொடுத்து வருகிறேன்.
இந்நிலையில், நேற்று மேகலாவை சந்தித்தேன். அப்போது அவளுடைய செல் போனை வாங்கி பார்த்ததில் வாட்ஸ்ஆப், பேஸ்புக்கில் வேறு ஒருவருடன் மேகலா தொடர்பில் இருப்பது தெரியவந்தது.
அதனை நான் கண்டித்தேன். ஆனால் மேகலா என்னுடைய பேச்சை கேட்கவில்லை.
தன்னுடைய இஷ்டப்படிதான் வாழ்வேன் என்று அவள் கூறியதால் எனக்கு ஆத்திரம் உண்டானது.
அதனால் அவளின் கழுத்தை அறுத்து கொலைசெய்தேன் என்று கணேஷ் கூறியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.