இடது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் நல்லதா? கெட்டதா.? இன்றைய ஜோதிட சந்தேகங்கள்..!!
இடது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் நல்லதா? கெட்டதா.? இன்றைய ஜோதிட சந்தேகங்கள்..!!
இன்றைய பகுதியில் ஜோதிடம், ஆன்மிகம், கனவு, விரதம், ராசி, நட்சத்திரம், பொருத்தம் போன்ற பல்வேறு சந்தேகங்களுக்கான பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
1. சரஸ்வதி அம்மாள் கனவில் மலர் கொடுத்தால் - சுபிட்சம் உண்டாகும்.
2. கும்ப லக்னக்காரர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? - எவருக்கும் பயமில்லாமல் நியாய தர்மங்களை எடுத்துரைக்கும் திறன் உடையவர்கள்.
3. உச்ச குரு வர்கோத்தமம் பெற்றால் - ஆன்மீக சிந்தனைகள் மேலோங்கும். வேறுபாடின்றி அனைவருக்கும் உதவுவார்கள்.
4. வாழை மரத்தை வெட்டுவதற்கு கையில் கத்தியுடன் இருக்க மற்றவர்கள் வாழை மரத்தை வெட்டுவது போல் கனவு கண்டால்- உடன் இருப்பவர்களை சரியாக புரிந்துக்கொள்ளாமல் மனக்கசப்புகள் ஏற்படுவதற்கான சூழல் உண்டாகும் என்பதனை உணர்த்துகிறது.
5. பெண்களுக்கு இடது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் நல்லதா? கெட்டதா? - நல்லது.
6. ஒரு பெண்ணிற்கு ஒரு ஆண் கோவிலில் விஷேசம் அன்று கொலுசு போட்டு விடுவது போல் ஒரு பெண் கனவு கண்டால் என்ன பலன்? - சுபச் செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும் என்பதனை உணர்த்துகிறது.
7. விரோதிகள் காவடி தூக்கி வருவது போல் கனவு கண்டால் - எதிர்ப்புகளால் சில தர்ம சங்கடமான சூழலும், சில சாதகமான பலன்களும் உண்டாகும்.