#தமிழகம் || மது அருந்திவிட்டு, பீடி புகைக்கும் 11 வயது சிறுமி.! வெளியான வீடியோ, பெரும் அதிர்ச்சில் தமிழக மக்கள்.!
thenkanikottai drugs addicted
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே 11 வயது சிறுமி ஒருவர், மது அருந்திவிட்டு, பீடி புகைக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் சிறார்கள், இளைஞர்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாவதும், மது பழக்கத்துக்கு அடிமையாவதும் அதிகரித்து வருகிறது.
இதற்கு முக்கிய காரணம் தமிழக அரசின் மதுக்கடையும், சினிமாத்துறையில் மது குடிப்பது, சிகரெட் புகைப்பதை ஃபேஷன் காட்டியதுதான், இந்த விபரீதம் நடப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் 11 வயது சிறுமி மது அருந்திவிட்டு, புகை பிடித்த காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெட்டமுகிலாலம் அடுத்த சுக்கல் பீடு பகுதியை சேர்ந்த அந்த 11 வயது சிறுமி, இளைஞர்களோடு சேர்ந்து மது குடிப்பதும், புகை பிடிப்பது போன்ற காட்சிகள் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதுகுறித்து வெளியான தகவலின்படி, சிறுமி போதை பழக்கத்திற்கு அடிமையானதாக தெரிகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி, சிறுமியின் நல்வாழ்வுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
English Summary
thenkanikottai drugs addicted