கள்ள காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் : துடிக்க துடிக்க கழுத்தை அறுத்து காவுகொடுத்த மனைவி..,
தனது கள்ள காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் ஓசூரில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜஸ்டின் என்பவர், டெல்லியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இவருக்கு இந்து என்கிற மனைவியும், இரண்டு வயதில் மகன் ஒருவரும் உள்ளனர்.
கடந்த 20 நாட்களுக்கு முன்னர் தான் பார்த்துவந்த வேலையை விட்டு தனது சொந்த ஊருக்கு வந்திருந்த ஜஸ்டின், தனது மனைவியுடன் ஓசூர் சென்று, அங்குள்ள மத்தம் அக்ரஹாரம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடிபெயர்ந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 20-ம் தேதி ஜஸ்டின் மாயமானதாக வந்த புகாரை அடுத்து, பல இடங்களில் தேடியும் காணததால் போலீசாருக்கு அவருடைய மனைவி இந்துவின் மீது சந்தேகம் வந்துள்ளது.
மேலும் அவருடைய வீடு முழுவதும் ரத்தக்கறைகள் படிந்திருந்ததால், அக்கம் பக்கம் உள்ளவர்கள் சந்தேகமடைந்து போலீசில் புகார் கொடுத்ததை அடுத்து போலீசார் போலீசார் ஜஸ்டினின் மனைவியினிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.
அதில் இந்துவே, தனது காதலன் லிண்டோவின் உதவியுடன், தனது கணவரை கொலை செய்து, மத்திகிரி கூட்டு ரோடு அருகில் இருக்கும்சு டுகாட்டில் புதைந்துள்ளது தெரிய வந்துள்ளது.
வேலை காரணமாக சென்ற கணவனை பிரிந்திருந்த இந்துவும், அவருடைய கள்ள காதலன் லிண்டோவும் கடந்த ஒன்னரை ஆண்டுகளாக காதலித்துள்ளனர். கணவனை பிரிவால் ஏங்கி இருந்த இந்துவிற்கு லிண்டோஉடனான உறவு கொஞ்சம் ஆறுதலாக இருந்திருக்கிறது.
இந்நிலையில், டெல்லியில் இருந்து தனது கணவன் திடீரென ஊருக்கு வந்ததால், இந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
தன்னுடைய கள்ள காதல் கணவருக்கு தெரிந்து விடாமல் இருக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட இந்து, இறுதியில் தனது கள்ள காதலனின் உதவியுடன் தூங்கி கொண்டிருந்த தனது கணவர் ஜஸ்டினை, கத்தியால் துடிக்க துடிக்ககழுத்தை அறுத்து கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, இந்துவை கைது செய்த போலீசார், தலைமறைவாகியுள்ள அவரின் கள்ள காதலன் லிண்டோவைத் தேடி வருகின்றனர்.