ஏரோட்டும் உழவரெல்லாம் ஏங்கி தவிக்கையில் தேரோட்டம் உனக்கெதுக்கு தியாகேசா..?? அதேதான் கேட்கிறேன் வைர விழா உமக்கெதுக்கு..?
நான் ஆத்திகர்களுக்கும் பக்தர்களுக்கும் தீங்கு விளைவித்தவன் அல்ல.
எந்த ஒரு கருத்தையும் மக்களிடம் எடுத்துச்சொல்ல வேண்டும். திணிக்க கூடாது என்பது எனது வாதம்.
இதுதான் அண்ணாவின் வாதம். எனவே பகுத்தறிவு என்பது பரப்பப்பட வேண்டுமே தவிர ஊட்டப்பட கூடாது.
நான் சட்டமன்றத்தில் முதல்வராக இருந்தபோது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த காளிமுத்து என்னை பார்த்து,
இன்று திருவாரூரில் தேர் ஓடுகிறதா என்றார். தெரியவில்லை என்றேன்.
அதற்கு காளிமுத்து, ‘ஏரோட்டும் உழவரெல்லாம் ஏங்கி தவிக்கையில் தேரோட்டம் உனக்கெதுக்கு தியாகேசா’ என பாடல் எழுதிய நீங்கள்,
இப்போது வாழ்த்து செய்தி அனுப்பியிருக்கிறிர்களே என கேட்டார்.
அதற்கு நான், எனது ஆட்சியில் தற்போது ஏரோட்டும் உழவரெல்லாம் நல்ல நிலையில் இருக்கிறார்கள். எனவேதான் தேரோட்டம் என கூறினேன். அதனால் தேர் ஓடுகிறது என்றேன்.
நாங்கள் என்றைக்கும் இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்பதை மட்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
அதே போல் சிலர் திராவிடத்தை வீழ்த்திவிட, அழித்திட துடிக்கின்றனர். திமுக இருக்கும் வரை அவர்களது எண்ணம் நிறைவேறாது.
திராவிடத்திற்கு எதிராக செயல்படுபவர்கள் கூட தனது கட்சிக்கு திராவிடத்தின் பெயரை சூட்டியுள்ளனர். அப்படியாவது அவர்கள் திராவிடத்தின் பெயரை கூறி கொண்டால் நமக்கு மகிழ்ச்சிதான் என்று கருணாநிதி அப்போது கூறினார்.
அதே நிலையில் தான் தமிழகம் தற்போது உள்ளது. கருணாநிதி சொன்னதை போல ஏரோட்டும் உழவர்கள் ஏங்கி தவிக்கின்றனர்.
அவர்கள் ஏங்கி தவிக்கையில் தேரோட்டம் எதற்கு என்ற வரிகள் முத்தாய் பதிந்து நிற்கிறது. இந்த நிலையில் தன் பிறந்த நாளிற்கு வைர விழா எதற்கு.
அதான் ஏரோட்டும் உழவர்கள் ஏக்கத்தில் இருக்கிறார்களே. தேரோட்டம் எதற்க்கு..?