தாம்பத்தியத்தில் மழையாய் குவியும் முத்தம்.! இன்பமான மற்றும் துன்பமான அலசல்.!!  - Seithipunal
Seithipunal


இந்த உலகின் அன்பின் அடையாளம் முத்தம். அன்றைய காலத்தில் முத்தம் என்பது சத்தமிட்டு பேச முடியாத வார்த்தைகளாக இருந்த நிலையில்., இடம்.. பொருள்.. ஏவல்.. என்பதை மறந்து முத்தத்தை பரிமாறிக்கொண்டு வருகின்றனர். இது குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு தற்போது பல விஷயங்கள் வெளிவந்துள்ளது. 

பெரும்பாலான ஆண்கள் பெண்களுக்கு முத்தம் வழங்குவதை., பெண்கள் அவர்களின் வாழ்க்கையில் ஓர் அங்கமாக நினைத்து வருகின்றனர். தங்களுக்கு இடையே இருக்கும் அன்பை பரிமாறும் விஷயமாகவும்., மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக முத்தம் இருப்பதாக புரிந்து கொள்கின்றனர். அந்த வகையில்., பெண்கள் முத்தத்திற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை ஆண்கள் பெரும்பாலும் அளிப்பதில்லை. 

இன்றுள்ள நிலையில் காதலித்து திருமணம் முடித்த தம்பதியாக இருக்கும் நபர்கள் காதலிக்கும் சமயத்தில் எங்கும் முத்தங்களுக்கு., திருமணத்திற்கு பின்னர் முக்கியத்துவம் அளிப்பதில்லை. தனது மனைவியே தேடி வந்து முத்தத்தை வழங்கினாலும் ஏதோ வேண்டா வெறுப்பாக பெற்று செல்வதாக கூறுகின்றனர். ஒரு அலைபேசியை உபயோகம் செய்ய சார்ஜ் ஏற்றுவது போல., உறவு சிறக்க முத்தம் முக்கியம். 

திருமணம் முடிந்த துணைக்கு கடைசி வரை வரும் அந்த துணையிடம் முத்தத்தை வழங்கி மற்றும் பெற்று வந்தால் இல்லறம் சிறப்பாக அமையும். பெரும்பாலான ஆண்கள் தாம்பத்தியத்தின் போது., ஒரு திறவுகோலாக முத்தத்தை பயன்படுத்துவதாக பல பெண்கள் குற்றசாட்டை எழுப்புகின்றனர். அவ்வாறு முத்தங்களை ஆண்கள் விரும்பி வந்து வழங்கினால்., தாம்பத்திய எதிர்பார்ப்புடன் நெருங்குவதாக தெரிகிறது. 

பிற மகிழ்ச்சியான தருணங்களில் தங்களின் துணையுடன் முத்த அன்பை பரிமாறிக்கொள்ள மறுப்புகள் தெரிவித்து வருகின்றனர். முத்தத்தை பொறுத்த வரையில் ஆண்களை விட பெண்கள் ரசித்து ருசித்து செயல்படுவதாக தெரியவருகிறது. வழக்கமாக கூறும் பழமொழிகளுக்கு ஏற்றார் போல "ஆசை அறுபது நாள்., மோகம் முப்பது நாள்" என்ற பழமொழிக்கு ஏற்றார் போல முத்தம் ஆண்களுக்கு சலிப்பை ஏற்படுத்துகிறதாம். 

பெண்களுக்கு புத்துணர்ச்சியை வழங்கும் ஓர் விஷயமாக முத்தத்தை கருதுவதால் அவர்களுக்கு முத்தத்தின் ஈர்ப்புகள் குறைவதில்லையாம். தாம்பத்தியத்தின் போது ஆண் முத்தத்தை மறந்து தனது உச்சத்தை அடைந்தாலும்., பெண்கள் ஒரு கணம் நினைத்தாலும் அவர்கள் தங்களின் நிலையை மறந்து துணைக்கு முத்த மழைகளை பொழிந்து துணையை கிறங்கடிக்க செய்யும் ஆற்றல் பெண்ணிற்கு உள்ளதாக தகவல் வெளியாகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

what is kiss? how wife and husband enjoy that? husband discourage kiss after marriage


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->