இல்லறம் சிறக்க... தாம்பத்தியத்தில் உச்சம் பெற., இனிமையாக வாழ... இன்றே சாப்பிடுங்கள்..!!  - Seithipunal
Seithipunal


என்னதான் இன்றுள்ள நவநாகரீக கட்டத்தில் நாம் வாழ்ந்து வந்தாலும்., நமது உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் நமது சுய பழக்கவழக்கத்தின் காரணமாக ஆண்கள் தங்களின் உயிரணுக்களின் எண்ணிக்கையை நாளுக்கு நாள் இழந்துகொண்டு வருகின்றனர். உடலில் உள்ள உயிரணுக்களுக்கு தேவையான போதிய சத்துக்கள் கிடைக்காமல் பல பாதிப்புகள் ஏற்படுகிறது. 

இதன் காரணமாக நமது இனப்பெருக்க மண்டலமும் சரிவர இயங்காமல்., வைட்டமின்கள் குறைபாட்டால் உயிரணுக்களின் உற்பத்தியானது குறைந்து பெரும் பிரச்சனைக்கு உள்ளாக்குகிறது. இதற்கு காரணமாக ஆர்ஓஎஸ் என்ற மூலப்பொருள் இருக்கும் ஸ்பெர்மில் அதிகமாக இருக்கும் பட்சத்தில்., உயிரணுக்கள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் உயிரணுக்களின் அழிவிற்கு வழிவகுக்கிறது. 

தினமும் வைட்டமின் சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வரும் பட்சத்தில் இனப்பெருக்க மண்டலம் எந்த விதமான பாதிப்பும் இன்றி இயங்கும் நிலையில்., அதனை பதிப்பிற்குள்ளாக்க புகை பிடித்து வருகிறோம். புகை பிடிப்பதால் உடலில் இருக்கும் உயிரணுக்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டு., உயிரணுக்களின் ஆயுட்காலமானது வெகுவாக குறைகிறது. 

இதனால் நமது மரபணுவில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாக பெரும் பிரச்சனை ஏற்படுகிறது. இது மட்டுமல்லாது உடற்பயிற்சி செய்கிறேன் என்ற பெயரில்., செய்யும் அதிகப்படியான உடற்பயிற்சியின் காரணமாகவும்., இனப்பெருக்க மண்டலம் பாதிப்பை அடைகிறது. நாம் சாப்பிடும் உணவில் ப்ரோட்டீன் சத்துக்கள் அதிகமாகவும்., கொழுப்புகள் குறைந்த அளவும் உள்ளபடி உண்ணவேண்டும். 

இதற்கு அதிகளவு காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட்டு வர வேண்டும். தேவையற்ற மாத்திரைகளை அதிகளவு சாப்பிடுவது மற்றும் கஃபைன் பொருட்கள் அதிகளவில் உள்ள பானங்களை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. நீண்ட நேரத்திற்கு மடிக்கணினியை மடியில் வைத்து உபயோகம் செய்வதால்., மடிக்கணினியில் இருந்து வெளியேறும் வெப்பத்தின் மூலமாக இனப்பெருக்க மண்டலம் அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

health tips for 18 plus peoples


கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது..
கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது..
Seithipunal