2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் ரஷ்ய விளையாட்டு வீரர்கள் இடம் பெறக்கூடாது - ஜெலென்ஸ்கி வலியுறுத்தல் - Seithipunal
Seithipunal


இரண்டாம் உலகப்போருக்கு பிறகு 1949-ம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 12 நாடுகள் இணைந்து நேட்டோ என்ற ராணுவ கூட்டமைப்பை உருவாக்கியது. தற்போது நேட்டோவில் 30 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

இந்நிலையில் ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைய உக்ரைன் விரும்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி உக்ரைன் மீது போரை தொடங்கியது. தற்பொழுது போர் 11 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இப்போரில் உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பா நாடுகள் பொருளாதார ரீதியாகவும், ஆயுதங்களை வழங்கியும் உதவி வருகின்றது. மேலும் இப்போரை முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் மற்றும் ஆகினான் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் இரு தரப்பும் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானிடம் தொலைபேசி வாயிலாக உரையாற்றினார். இதில் 2024ல் பாரிசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்யா விளையாட்டு வீரர்கள் இடம் பெறக்கூடாது என்று பிரான்ஸ் அதிபரிடம் வலியுறுத்தியுள்ளதாக தொலைபேசி உரையாடலுக்கு பிறகு டெலிகிராமில் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Zelensky Emphasis Russian Athletes Should Not Compete At 2024 Paris Olympics


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->