கழுத்தில் பவுன்சர் பந்து தாக்கியதில் ஆஸ்திரேலியா இளம் கிரிக்கெட் வீரர் மரணம்: கிரிக்கட் ரசிகர்கள் அதிர்ச்சி..!
Young Australian cricketer dies after being hit in the neck by a ball
ஆஸ்திரேலியாவை சேர்ந்த 17 வயது இளம் கிரிக்கெட் வீரர் ஒருவர் பயிற்சியின் போது கழுத்தில் பந்து தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் மெல்போர்னில் கிளப் அணிக்காக விளையாடிய பென் ஆஸ்டின் என்ற 17 வயது இளம் கிரிக்கெட் வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை டி20 போட்டிக்கு முன்னதாக பென் ஆஸ்டின் வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது தானியங்கி இயந்திரம் வீசிய பவுன்சர் பந்து ஆஸ்டினின் கழுத்துபகுதியை தாக்கியதாக கூறப்படுகிறது. ஹெல்மெட் அணிந்து கொண்டு பேட்டிங் செய்து பயிற்சி மேற்கொண்ட போதும் பவுன்சர் பந்து தாக்கியதில் அவர் சுருண்டு விழுந்துள்ளார்.
உடனடியாக அருகில் இருக்கும் மோனஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், 02 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு புதன்கிழமை அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து ஃபெர்ன்ட்ரீ கல்லி கிரிக்கெட் கிளப், "பென் ஆஸ்டின் மறைவால் நாங்கள் முற்றிலும் துயரமடைந்துள்ளோம்” என தங்களுடைய வருத்தத்தை அறிக்கையின் மூலம் வெளிப்படுத்தியுள்ளது.
இதேபோன்று கடந்த 2014-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ் உள்ளூர் ஷெஃபீல்ட் ஷீல்ட் ஆட்டத்தின் போது கழுத்தில் பந்து தாக்கி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Young Australian cricketer dies after being hit in the neck by a ball