சிறிய நாடுகள் மீது, சீனா தனது ஆதிக்கத்தை செலுத்தாது -  சீன அதிபர் ஜின்பிங்.! - Seithipunal
Seithipunal


தென்கிழக்கு ஆசியாவில் உள்ள சிறிய நாடுகள் மீது, சீனா தனது ஆதிக்கத்தை செலுத்தாது என்று சீனாவின் அதிபர்ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு ஆசியாவில் சீனா தனது அதிகாரத்தை விரிவுபடுத்த முயற்சி செய்வதாக, தென்கிழக்கு ஆசியாவில் உள்ள சிறிய நாடுகள் தொடர்ந்து வருத்தம் தெரிவித்து வருகின்றனர். 

தென்சீனக்கடல் விரிவாக்கம் காரணமாக, சீனாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த நிலையில், ஆசியான் என்று அழைக்கப்படக்கூடிய ஆசிய நாடுகளின் சங்கத்துக்கும், தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடையிலான 30 ஆண்டு கால உறவை குறிக்கும் வகையில் இன்று காணொளி மூலமாக மாநாடு நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட சீன அதிபர் ஜின்பிங் பேசியதாவது,

"தென்கிழக்கு ஆசிய மீது சீனா ஆதிக்கம் செலுத்தாது. சிறிய நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்த மாட்டோம். சீனா மேலாதிக்கம் மற்றும் அதிகார அரசியலை உறுதியுடன் சீனா எதிர்க்கிறது.

அண்டை நாடுகளுடன் நாங்கள் நட்புறவை விரும்புகிறோம். அமைதியையும் கூட்டாக வளர்வதையும், கூட்டாக அமைதியை வளர்க்கவே நாங்கள் விரும்புகிறோம். சிறிய நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்தி, அவர்களை நாங்கள் கொடுமைப்படுத்த மாட்டோம்" என்று அந்த மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Xi Jinping say China stand


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal