உலக மனிதநேய தினம் இன்று... மலரட்டும் மனித நேயம்...!! - Seithipunal
Seithipunal


உலக மனிதநேய தினம் :

முதலாவது உலக மனிதநேய தினத்தை, ஆகஸ்ட் 19ஆம் தேதியன்று 2009ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. போர், இயற்கைப் பேரழிவு, நோய், ஊட்டச்சத்து பற்றாக்குறை போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் சில நல்ல மனிதர்கள் தங்கள் உயிரைக்கூடப் பொருட்படுத்தாமல் போராடுவார்கள். இவர்களை நினைவுக்கூறும் விதமாக இத்தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

சத்தியமூர்த்தி :

விடுதலைப் போராட்ட வீரர் சத்தியமூர்த்தி 1887ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயத்தில் பிறந்தார்.

இவர் சென்னை பார்த்தசாரதி கோவிலில் 1930ஆம் ஆண்டு தேசிய கொடியை ஏற்ற முயன்றபோது கைது செய்யப்பட்டார். அதன்பின், இவர் 1939ஆம் ஆண்டு சென்னையில் மேயராகப் பணியாற்றிய போது, இரண்டாம் உலகப்போர் நடைபெற்றது. அந்த நேரத்தில் சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவியது. இதனைத் தீர்க்க பிரித்தானிய அரசுடன் போராடி பூண்டி நீர்த்தேக்கத்திற்கான வரைவு ஒப்புதலைப் பெற்று தமது குறுகிய ஓராண்டு பணிக்காலத்திலேயே அதற்கு அடிக்கல்லை நாட்டினார்.

இவரது ஒப்பற்ற பணியை நினைவுக்கூர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்திற்கு சத்தியமூர்த்தி பவன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. தீரர், சொல்லின் செல்வர், நாவரசர் என்றெல்லாம் புகழப்பட்ட சத்தியமூர்த்தி, முதுகுத்தண்டு காயத்தால் பாதிக்கப்பட்டு 1943ஆம் ஆண்டு மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

world humanitarian day 2021


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->