கடும் நிதி நெருக்கடி: 70 நாடுகளில் பணிகள் முடங்கும் அபாயம்: கோடிக் கணக்கான மக்கள் ஆபத்து: உலக சுகாதார நிறுவனம் கவலை..! - Seithipunal
Seithipunal


நிதி பற்றாக்குறை காரணமாக, 70 நாடுகளின் மருத்துவ சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ளது. இந்த அமைப்பின் தலைவராக டெட்ரோஸ் அதானோம் உள்ளார்.

உலக சுகாதார நிறுவனம் (W H O)  ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அமைப்பாகும். உலகெங்கிலும் உள்ள பொது சுகாதாரப் பிரச்னைகளைத் தீர்க்கவும், சர்வதேச அளவில் சுகாதார நெருக்கடிகளுக்குப் பதிலளிக்கவும், பொது சுகாதாரக் கொள்கைகளை உருவாக்கவும் செயல்படுகிறது. 

வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் வறுமை நிலையில் இருக்கும் நாடுகளுக்கு இந்த அமைப்பின் பணியாளர்கள் சுகாதார சேவை அளித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இந்த அமைப்பு நிதிப் பிரச்சினையால் பெரிய அளவில் சந்தித்து வருகிறது. அத்துடன், இந்த அமைப்புக்கு அதிகப்படியான நிதி வழங்கி வந்த அமெரிக்காவும், வெளியேறப்போவதாக அறிவித்துள்ளது. 

இதன் காரணமாக எதிர்வரும் ஆண்டுகளில் நிதி நிலைமை உலக சுகாதார நிறுவனம் மோசமாக அமையும். இந்நிலையில், தங்களது நிறுவனத்தின் துறைகளை பாதிக்குப்பாதியாக குறைப்பதற்கும், பணியாளர்கள் செலவினத்தை கணிசமாக குறைப்பதற்கும் உலக சுகாதார நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

அத்துடன், பல்வேறு நாடுகளில் உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவ சேவைகள், பாதிக்கப்படும் என்றும் W.H.O. அமைப்பு கூறியுள்ளது. அத்துடன், 'நிதி பங்களிப்புக்கு இனி சீனாவை நம்ப வேண்டியது இருக்கும்' என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இது தொடர்பாங்க், உலக சுகாதார நிறுவன நிர்வாக இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கூறியதாவது: தற்போது ஆண்டு பட்ஜெட்டில் 600 மில்லியன் டாலர் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அடுத்து வரும் 02 ஆண்டுகளில் 21 சதவீத நிதி பற்றாக்குறை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இது குறித்து உலக சுகாதார நிறுவன அதிகாரிகள், இன்று முதல் ஜெனீவாவில் நன்கொடையாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் இணைந்து ஆலோசித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மருத்துவ சேவை நெருக்கடிகளை, முக்கிய நிதி வழங்கும் நாடான அமெரிக்கா இல்லாமல் எப்படி சமாளிப்பது என்பது குறித்து விவாதித்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நிதி பற்றாக்குறையால், 70 நாடுகளில் அத்தியாவசிய மருத்துவ சேவைகள் பாதிக்கப்படும் என்றும்,  அடிப்படை சிகிச்சை, தடுப்பூசிகள், மகப்பேறு பராமரிப்பு போன்றவை கிடைக்காததால், கோடிக் கணக்கான மக்கள் ஆபத்தில் உள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

குறிப்பாக ஆப்பிரிக்கா, தெற்கு ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவின் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகள் மிகவும் பாதிப்படைந்துள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும்,  நிலைமை மோசமாவதை தடுக்க உலக நாடுகள் தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் டெட்ரோஸ் அதானோம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

World Health Organization to shut down operations in 70 countries due to severe financial crisis


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->