உள்ளாடைக்குள் வைத்து பாம்பை கடத்திய பெண்.. சுங்க அதிகாரிகள் அதிர்ச்சி.!
Women smuggling snakes inner in China
சீனாவில் பெண் ஒருவர் உள்ளாடைக்குள் வைத்து 5 பாம்புகளை கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவிற்கும், ஹாங்காவிற்கும் இடையிலான எல்லைப் பகுதியான புக்சியன் துறைமுகத்திற்கு ஆங்காங் செல்ல பெண் ஒருவர் வந்துள்ளார். இதில், சந்தேகத்தின் பெயரில் அந்த பெண்ணை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தபோது அதிர்ச்சி அடைந்தனர்.
அதன்படி அந்த பெண்ணின் மேல் உள்ளாடையில் மார்பகங்களுக்கு இடையே 5 பாம்பு குட்டிகளை துணி பைகளில் கட்டி மறைத்து வைத்திருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து அந்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் விலை உயர்ந்த பாம்பு குட்டிகளை கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அந்த பெண்ணிடம் இருந்து பாம்புகள் மீட்கப்பட்டன. மேலும் அந்த பெண் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நூதனமாக கடத்தும் சம்பவங்கள் எவ்வளவோ கேள்விப்பட்டிருப்போம் ஆனால் பாம்பை உள்ளாடைக்குள் வைத்து கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Women smuggling snakes inner in China