நடுரோட்டில் புருஷன் கேட்டு நின்ற மாடல் இளம்பெண்.! - Seithipunal
Seithipunal


நடுரோட்டில் புருஷன் கேட்டு நின்ற மாடல் இளம்பெண்.!

அமெரிக்கா நாட்டில் உள்ள நியூயார்க் நகரில் மன்ஹாட்டன் பகுதியைச் சேர்ந்த கரோலினா கீட்ஸ் என்பவர் பத்துக்கும் மேற்பட்ட மாடலிங் இதழ்களின் அட்டை படத்தை அலங்கரித்தவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக தனக்கான துணையை தேடி வருகிறார். 

இதற்காக பல்வேறு டேட்டிங் ஆப்களை முயற்சித்து பார்த்த அவர், அதனை கைவிட்டு, தற்போது நூதன முறையில் தனக்கான கணவரைத் தேடி சாலைக்கே வந்துள்ளார். 

தினமும் தனது கைகளில் "எனக்கான கணவனை தேடுகிறேன்" என்ற வாசகம் அடங்கிய பதாகையை ஏந்தியபடி நகரின் முக்கிய சாலைகளில் நிற்கிறார். இவருடைய இந்த வினோத செயல் பலரை ஆச்சரியத்திற்குள்ளாக்கினாலும் கூட, வரவேற்பையும் பெற்றுள்ளது. 

இதற்கிடையே, இவரது பாதகையை பார்த்த ஒருவருடன் தன் போன் நம்பரை பரிமாறிக் கொண்ட கரோலினா, எனக்கான துணையை கண்டுபிடித்து விட்டேன் என்று நினைக்கிறேன் என பதிவிட்டிருந்தார். மேலும், அவருடன் பேசி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், கரோலினா கீட்ஸ் அந்த நபர் தனக்கு ஏற்றவர் அல்ல என்பதால், மீண்டும் சாலையில் பதாகையுடன் நின்று வருகிறார். கணவரை தேடி சாலைக்கு வந்த கரோலினாவின் முயற்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

woman protest mid road in america for want husband


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->