உண்மையில் வேற்றுக்கிரகவாசிகள் உயிருடன் இருக்கின்றார்களா..? இல்லையா..? விஞ்ஞானிகள் கூறுவது என்ன..? - Seithipunal
Seithipunal


பூமிக்கு வெளியே உயிர்கள் இருப்பதற்கான மிக வலுவான அறிகுறிகள் கிடைத்துள்ளதாக 2025-ஆம் ஆண்டு செய்திகள் வெளியாகின. அதிலும் முக்கியமாக K2-18b என்ற வேற்றுக்கிரகத்தில் உயிர்கள் இருக்கலாம் என்ற தகவல் அதிகம் கவனம் ஈர்த்தது. அதேபோல், செவ்வாய்க் கிரகத்தில் NASA-வின் Perseverance ரோவர் ஆய்வு செய்த 'Cheyava Falls' என்ற பாறையிலும், உயிரினங்களின் செயல்பாட்டுடன் தொடர்புடையதாக இருக்கக்கூடிய சில அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக NASA தெரிவித்தது.

இதனைத் தெரிந்துகொள்ள உலகம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான வானியல் மற்றும் வேற்றுக்கிரக உயிரியல் ஆராய்ச்சியாளர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

அதன்படி, K2-18b தொடர்பான ஆய்வில், வெறும் 6.6% விஞ்ஞானிகள் மட்டுமே வேற்றுக்கிரக உயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம் என்று ஒப்புக்கொண்டனர். சுமார் மூன்றில் இரண்டு பங்கு விஞ்ஞானிகள் இதை ஏற்கவில்லை. 28% பேர் எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை.

அடுத்து, செவ்வாயின் பாறையில் செய்யப்பட்ட ஆய்வில் நம்பிக்கை சற்று அதிகமாக இருந்தது. 15.1% பேர் உயிரினங்களின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தனர். 44.6% பேர் இதை ஏற்கவில்லை. 40.3% பேர் நடுநிலையாக இருந்தனர்.

இதிலிருந்து விஞ்ஞானிகளின் கருத்து வெறுமனே ஆம் அல்லது இல்லை என்று இரண்டாகப் பிரிந்துவிடவில்லை. ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என்று பலர் கருதுவதாக தெரிகிறது.

K2-18b தொடர்பான தகவல்கள் பூமியில் இருந்து மிகத் தொலைவில் உள்ள ஒரு கிரகத்தின் வளிமண்டலத்தை ஆய்வு செய்ததன் அடிப்படையில் கிடைத்தவை. ஆனால், செவ்வாய் பாறையை நேரடியாக ஆய்வு செய்ய முடிகிறது. அதனால், இரு ஆய்வுகளுக்கும் இடையே முக்கியமான வேறுபாடு உள்ளது.

இதில், உயிரினங்கள் உருவாக்கக்கூடிய சில அடையாளங்கள், இயற்கையான உயிரற்ற செயல்முறைகளாலும் உருவாகலாம் என்பதையும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆனாலும், வேற்றுக்கிரக உயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன என்று உறுதியாகக் கூறும் நிலைக்கு விஞ்ஞானிகள் இன்னும் வரவில்லை என்பது தெரிகிறது. புதிய ஆதாரங்கள் கிடைக்கும் வரை, இந்த விவகாரத்தில் எச்சரிக்கையுடன் முடிவெடுக்க வேண்டும் என்பதே பெரும்பாலான விஞ்ஞானிகளின் நிலைப்பாடாக உள்ளது தெளிவாக புரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

What do scientists say about whether or not extraterrestrials exist


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->