சோதனை மேல் சோதனை; நேபாளத்தை உலுக்கியுள்ள நிலநடுக்கம்; பீதியில் உறைந்துள்ள மக்கள்.!
Earthquake in Nepal last night
கடந்த 14 நாட்களுக்கு முன்பு, நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் பகுதியிலும், இந்தியாவிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தியாவின் பீகார், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களிலும், நேபாள வெள்ளத்தின் தாக்கம் எதிரொலித்தது. வெள்ளம் ஏற்பட்டு, 02 வாரங்கள் கடந்துள்ள நிலையிலும் வெள்ளத்தில் மாயமானவர்களை மீட்கும் பணி தொடர்ந்து இன்னும் நடைபெற்று வருகிறது.
கடந்த ஆகஸ்டு 26-ஆம் தேதி அன்று, இமயமலையில் உள்ள பனிப்பாறை உருகியதால், நேபாளத்தின் கோஷி ஆற்றிலும், திரிசூலி ஆற்றிலும் மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டது. 50 ஏக்கர் பரப்பளவு கொன்ட பனிப்பாறை உருகி, 300 கி.மீ வேகத்தில் மினி சுனாமி போல் வந்த இந்த வெள்ளத்தில் விழுந்தது. இந்த இயற்கையின் கோரத்தாண்டவத்தில் 1300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதுடன், 05 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.

ஏற்கெனவே, வெள்ளத்தின் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்தில், நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை பீதியடைய வைத்துள்ளது. நேபாளத்தின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள முஸ்தாங் மாவட்டத்தில், நேற்று இரவு 10 மணி அளவில், 5.3 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள், அன்டை மாவட்டங்கள் சிலவற்றிலும் உணரப்பட்டதாகச் கூறப்படுகிறது. குறித்த நிலநடுக்கமானது தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தகவல்களின்படி, காத்மாண்டில் இருந்து வடமேற்கே 375 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முஸ்தாங் மாவட்டத்தின் லோமந்தாங் பகுதியின் மையத்தில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால், உயிர்ச்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக உடனடியாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை. எனினும், மனாங், டோல்பா மற்றும் மியாக்டி (Myagdi) ஆகிய மாவட்டங்களிலும் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன
இந்த நிலநடுக்கங்கள், தீவிர வானிலை நிகழ்வுகளால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நாடான நேபாளத்தில், இந்தச் சமீபத்திய நிலநடுக்கம் மக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அதிகாரிக நிலைமையை மதிப்பிட்டு வருகின்றனர்.
English Summary
Earthquake in Nepal last night