விமானத்தில் காற்றழுத்தக் கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு; 27 ஆயிரம் அடிக்குச் சரிந்த விமானம்; மூச்சுவிட முடியாமல் மரண பயத்தில் அலறி பயணிகள்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, சால்ட் லேக் சிட்டிக்கு டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737-900 ER ரக விமானம் சென்று கொண்டிருந்தது.

குறித்த விமானம்சேருமிடத்தை அடைவதற்கு சற்று முன்பு, விமானத்தில் இருந்த காற்றழுத்தக் கட்டுப்பாட்டு அமைப்பு திடீரென பழுதடைந்துள்ளது. இதனால், பயணிகள் மூச்சுவிட சிரமப்பட்டதாகவும், காதுகளில் மிகக் கடுமையான வலி ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

இதனால் மரண பயத்தை அடைந்த பயணிகள் அலறித் துடித்து போது, சுவாசக் கோளாறுகளைச் சரி செய்வதற்காக, விமானத்தில் தானியங்கி முறையில் ஆக்ஸிஜன் முகமூடிகள் வந்துள்ளன. குறித்த முகமூடியை அணிந்துகொண்ட பிறகும், விமானப் பணியாளர்களின் அறிவிப்புகளை தங்களது காதுகளால் கேட்க முடியவில்லை என்றும் கூறப்பட்டது.

இறுதியில், பொதுமக்கள் எளிதில் சுவாசிக்க ஏதுவாக, 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானம், 27 ஆயிரம் அடி சரிந்து, 10 அடி உயரத்தில் பறக்கத் தொடங்கியுள்ளது. இந்த அவசர நிலை ஏற்பட்டபோது லாஸ் வெகாஸ் நகருக்கு அருகில் பறந்துகொண்டிருந்த விமானம், அங்கிருந்த சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் இருந்த மென்பொருள் கோளாறு சரிசெய்யப்பட்ட பிறகு, அதே விமானம் பின்னர் சால்ட் லேக் சிட்டிக்கு பாதுகாப்பாக புறப்பட்டுச் சென்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தப் பெருங்காயமும் அல்லது உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று விமான நிறுவனமும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Delta Boeing 737 Drops To 9000 Feet As Oxygen Masks Deploy


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->