திருமண உறவில் மனைவியின் விருப்பத்திற்கு மாறான பாலியல் உறவு; உச்ச நீதிமன்றத்திற்கு மத்திய அரசு முக்கிய பதில்..! - Seithipunal
Seithipunal


திருமண உறவுக்குள் மனைவியின் விருப்பத்திற்கு மாறாக நடைபெறும் பாலியல் உறவை குற்றமாகக் கருத வேண்டும் எனக் கோரி பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீதான விசாரணை, தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு குறித்து இன்று புதன்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது மத்திய அரசு தனது நிலைப்பாட்டை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதாவது, ''திருமண வன்கொடுமையை குற்றமாக்குவது தொடர்பான முடிவு நாடாளுமன்றம் மற்றும் அரசின் கொள்கை சார்ந்த அதிகார வரம்புக்குள் வருவதாகவும், இதனை உச்சநீதிமன்றம் தீர்மானிப்பது பொருத்தமானதல்ல.'' என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தற்போதுள்ள சட்டங்களில் மாற்றம் செய்து திருமண வன்கொடுமையை தனிக் குற்றமாக வரையறுப்பது நாடாளுமன்றத்தின் பணியாகும் என மத்திய அரசு தரப்பில் வாதிட்டது. இதுபோன்ற முக்கியமான சமூக மற்றும் சட்ட மாற்றத்தை நீதிமன்றத்தின் மூலம் மேற்கொள்வதற்குப் பதிலாக, நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்தி முடிவு எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.

இதற்கிடையே, நீதிபதி ஜாய்மால்யா பாக்சிஇது குறித்து தனது கருத்தை முன்வைத்துள்ளார். அதாவது, 'திருமணம் என்பது ஒரு பெண்ணின் சுதந்திரத்தை முற்றிலும் அழிப்பதாக இருக்க முடியாது.' என அவர் குறிப்பிட்டார்.

இந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணை 03 வாரங்களுக்குப் பிறகு புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Central Government responds to Supreme Court regarding marital rape


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->