அர்மேனியா மற்றும் அஜர்பைஜான் எல்லையில் நிலவும் போர்ப்பதற்றம்.! படைகளை குவிக்கும் ஈரான்.! - Seithipunal
Seithipunal


சோவியத் யூனியனிடமிருந்து பிரிந்த அர்மேனியா மற்றும் அஜா்பைஜானுக்கும் இடையே கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற எல்லை தொடர்பான போரில் நாக்ரோனா-கராபாக் மாகாணத்தை அஜர்பைஜான் கைப்பற்றியது.

மேலும் நாக்ரோனா-கராபாக் மாகாணத்தில் இரு நாட்டினரும் மோதலில் ஈடுபட்டு வரும் நிலையில், அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட 2000 ரஷ்யா வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அஜர்பைஜானில் ஈரானை போல ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் பெருமளவில் வசிக்கின்றனர். இருப்பினும் அஜர்பைஜானுக்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு ஆதரவு அளித்து வரும் நிலையில், அங்கு தங்கி முகாமிட்டிருக்கும் அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் ஈரானின் ராணுவம் மற்றும் அணு ஆயுத நடவடிக்கைகளை உளவு பார்த்துவருவதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.

இதனால் அஜர்பைஜானுக்கு எதிராக செயல்பட நினைக்கும் ஈரான் அர்மேனியாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டுள்ளது.

மேலும் அஜர்பைஜான் மற்றும் அர்மேனியா இடையே மீண்டும் போர் பதற்றம் நிலவி வருவதால் அஜர்பைஜான் எல்லைபகுதியில் பீரங்கிகள் மற்றும் கனரக ராணுவ வாகனங்கள் உள்ளிட்ட படைகளை ஈரான் குவித்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

War situation in Armenia and Azerbaijan border


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->