வாங்காதீர்கள்’ என்ற அமெரிக்கா… இப்போது ‘வாங்குங்கள்’ என மாறிய நகைச்சுவையான நிலை...! - ஈரான் கடும் விமர்சனம்
US which once said Do not buy now says Buy Moment Iran Slams Shift
மத்திய கிழக்கில் ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் தீவிரமடைந்ததால், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வேகமாக உயர்ந்து பேரலுக்கு 100 டாலரைத் தாண்டியுள்ளது.
இதனால் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க, கடலில் கப்பல்களில் தேங்கி இருக்கும் ரஷியா எண்ணெயை வாங்கும் வகையில் அந்த நாட்டுக்கு விதிக்கப்பட்ட சில பொருளாதார தடைகளை 30 நாட்களுக்கு மட்டும் தளர்த்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

அண்மையில் இந்தியா - அமெரிக்கா இடையே ஏற்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தில் ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்கமாட்டோம் என்று இந்தியா உறுதி அளித்திருந்த நிலையில், தற்போதைய போர் சூழ்நிலையை முன்னிட்டு 30 நாட்களுக்கு மட்டும் ரஷிய எண்ணெய் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்த சூழலில், ஒருகாலத்தில் ரஷிய எண்ணெயை வாங்க வேண்டாம் என்று உலக நாடுகளை எச்சரித்த அமெரிக்கா, இப்போது அதையே வாங்குமாறு நாடுகளிடம் கோருவது இரட்டை முகத்தனமான கொள்கை என அப்பாஸ் அர்கசி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்திய செய்தித்தாளில் வெளியான கட்டுரையை பகிர்ந்து அவர் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில், “ரஷிய எண்ணெய் இறக்குமதியை நிறுத்துமாறு இந்தியாவை அமெரிக்கா பல மாதங்கள் அழுத்தம் கொடுத்தது.
ஆனால் ஈரானுடனான இரண்டு வாரப் போருக்குப் பிறகு, தற்போது இந்தியா உட்பட உலக நாடுகளிடம் ரஷிய கச்சா எண்ணெயை வாங்குமாறு வெள்ளை மாளிகை வேண்டுகோள் விடுக்கிறது. இது ஆச்சரியமான திருப்பம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
US which once said Do not buy now says Buy Moment Iran Slams Shift