அமெரிக்காவில் வேற்றுகிரகவாசிகள்..? ரகசிய கோப்புகளை வெளியிட உத்தரவிட்டுள்ள அதிபர் டிரம்ப்..!
US President Trump has ordered the release of secret files on aliens in the United States
அமெரிக்க ஆய்வாளர்கள் வேற்றுக்கிரகவாசிகளை பிடித்து வந்து, அந்நாட்டின் நெவாடா பகுதியில் உள்ள ரகசியமான இடமான 'ஏரியா 51'-இல் வைத்து ஆய்வு செய்து வருவதாகவும் உலகம் முழுவதும் கருத்து பரவி உள்ளது
இந்த நிலையில், சமீபத்தில், பாட்காஸ்ட் ஒன்றில் பேசிய முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பேசுகையில், "பிரபஞ்சம் மிகப் பெரியது. மற்ற கிரகங்களில் உயிர் இருக்க வாய்ப்புள்ளது. ஆனாலும், வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வந்ததற்கான எந்த ஆதாரமும் தனக்குக் கிடைக்கவில்லை" என்று தெரிவித்திருந்தார்.
ஒபாமாவின் வேற்றுகிரக வாசிகள் இருக்கலாம் என்ற நம்பிக்கை தற்போது அமெரிக்காவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வேற்று கிரகவாசிகள் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் விமானங்கள் பற்றிய கோப்புகளை ரகசிய பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து, அமெரிக்க ராணுவ தலைமையமாக பென்டகன், மற்றும் தொடர்புடைய துறைகள் தொடர்புடைய துறைகள் தங்கள் வசம் உள்ள வேற்றுகிரகவாசிகள் தொடர்புடைய ஆவணங்களை பொதுவெளியில் வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது: "வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. அதைப் பற்றி எனக்கு எந்தக் கருத்தும் இல்லை. நான் அதைப் பற்றி ஒருபோதும் பேசுவதில்லை. நிறைய பேர் அதை நம்புகிறார்கள். நான் ரகசிய ஆவணங்களை வெளியிட்டு ஒபாமாவின் சந்தேகங்களை நீக்குவேன்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
US President Trump has ordered the release of secret files on aliens in the United States