ஆப்கானுக்குள் மீண்டும் நுழைந்து சீனாவுக்கு செக்: ட்ரம்ப் மாஸ்டர் பிளான்: சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலை..!
US President announces plan to retake Afghan airbase
ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ராம் விமானப்படை தளத்தை மீண்டும் கட்டுப்பாட்டில் கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சிப்பதாக தெரிவித்துள்ளமை சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் சுமார் 20 ஆண்டுகளாக அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவத் தளமாக விளங்கிய பக்ராம் விமானப்படை தளம், கடந்த 2021-ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தால் கைவிடப்பட்டது. அத்துடன், அங்கிருந்த அமெரிக்கப் படைகள் வெளியேறிய சில வாரங்களிலேயே, ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றினர்.
மேலும், அந்தத் ராணுவத் தளத்தையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இந்த வெளியேற்றத்தை 'முழுப் பேரழிவு' என அப்போது தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து விமர்சித்து வந்தார்.

இந்நிலையில், இங்கிலாந்துகு 02 நாள் அரசு சுற்றுப்பயணத்தில் அந்நாட்டின் பிரதமர் கீர் ஸ்டார்மருடன் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியமை வைரலாகியுள்ளது. அதாவது, ஆப்கானில் உள்ள பக்ராம் தளத்தை மீண்டும் கைப்பற்ற தனது நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், ஆப்கானிஸ்தானுக்காக அல்ல, சீனாவுக்காகவே அந்தத் தளத்தை நாங்கள் வைத்திருக்க விரும்பினோம் என்று தெரிவித்துள்ளார்.
சீனாவின் அணு ஆயுத உற்பத்தி மையங்களுக்கு மிக அருகில் இந்த பக்ராம் அமைந்துள்ளது. தலிபான்களுக்கு எங்களிடமிருந்து சில உதவிகள் தேவைப்படுவதால், அவர்களை எங்களது வழிக்குக் கொண்டு வர முடியும் என்று ட்ரம்ப் பேசியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பக்ராம் தளத்தை சீனா பயன்படுத்துவதாக ஏற்கனவே டிரம்ப் குற்றம்சாட்டி இருந்தார். ஆனால், தலிபான்கள் மறுத்திருந்தனர். இந்நிலையில், தற்போது டிரம்பின் இந்தப் புதிய அறிவிப்பு குறித்து தலிபான்கள் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
US President announces plan to retake Afghan airbase