உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு! முடிவுக்கு வருமா போர்!
Ukraine Trump Zelensky america putin Russia Ukraine war
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, வருகிற ஆகஸ்ட் 18ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்பை வாஷிங்டனில் சந்திக்க உள்ளார்.
இந்த சந்திப்பில், உக்ரைன்-ரஷ்யா போர் நிறுத்தம் தொடர்பான முக்கிய விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசிக்க உள்ளனர்.
அதிபர் டிரம்ப் சமீபத்தில் அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து ஜெலன்ஸ்கியை சந்திக்க உள்ளதால், இந்த சந்திப்பு சர்வதேச அளவில் பெரும் முக்கியத்துவம் பெறுகிறது.
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர இருநாடுகளின் நேரடி பேச்சுவார்த்தைக்கு இடமளிக்க அமெரிக்கா முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. ஜெலன்ஸ்கி, அமெரிக்காவின் ஆதரவைப் பெற்று தனது நாட்டின் நிலையை வலுப்படுத்த விரும்புகிறார்.
டிரம்ப், புதினுடன் நடந்த கலந்துரையாடலின் முடிவுகளைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பிருப்பதால், இந்த சந்திப்பு போர் நிறுத்தத்திற்கான தீர்வை உருவாக்கும் படியாகக் கருதப்படுகிறது.
English Summary
Ukraine Trump Zelensky america putin Russia Ukraine war