ரஷிய எல்லைக்குள் புகுந்து உக்ரைன் மரண அடி...! - ஆக்ரோஷ டிரோன் தாக்குதலில் 4 பேர் துடிதுடிக்க பலி...! - Seithipunal
Seithipunal


உக்ரைன் மற்றும் ரஷியா இடையிலான ரத்தக்கலவரப் போர் இன்று 1,544-வது நாளை எட்டியுள்ள நிலையில், இரு நாடுகளுக்குமிடையிலான தாக்குதல்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன. பல ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த யுத்தத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து ஆயுத உதவிகள், நிதி ஆதரவு மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி வருகின்றன.

இதற்கிடையில் போரை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட சமாதான முயற்சிகள் பலனளிக்காததால், போர்க்கள சூழல் மேலும் பதற்றமடைந்துள்ளது.

இந்த பரபரப்பான சூழலில், நேற்று இரவு ரஷியாவை குறிவைத்து உக்ரைன் மிகப்பெரிய டிரோன் தாக்குதலை அரங்கேற்றியுள்ளது. குறிப்பாக ரஷிய தலைநகரமான மாஸ்கோ மற்றும் ஹிம்கி உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது 500-க்கும் மேற்பட்ட டிரோன்கள் ஏவப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த அதிரடி வான்தாக்குதலில் 4 பேர் உயிரிழந்ததுடன், 12 பேர் கடுமையாக காயமடைந்துள்ளதாக ரஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 30 நாட்களில் ரஷியாவை குறிவைத்து உக்ரைன் மேற்கொண்ட மிகப்பெரிய அளவிலான டிரோன் தாக்குதல் இதுவாக கருதப்படுவதால், சர்வதேச அரங்கில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ukraine strikes death blow Russian drone strikes into Ukraine 4 people die aggressive drone attack


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->