போரினிடையே பாதுகாப்பு அமைச்சரை மாற்றும் உக்ரைன்.! - Seithipunal
Seithipunal


ரஷ்யா, உக்ரைன் இடையேயான போர் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போர் தொடங்கி ஓராண்டை நெருங்கும் நிலையில், உக்ரைனின் ராணுவ உளவு அமைப்பின் தலைவரான கைரிலோ புடானோவ், உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவுக்கு பதிலாக நியமிக்க உள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைன் போரில் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோ முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் அவரை எதிர்த்து அதிகாரிகள் ராஜினாமாக்கள் செய்து வந்தனர். இதையடுத்து பாதுகாப்பு அமைச்சர் மாற்றப்படுவதாகவும், அவர் தொழில்துறை அமைச்சராக நியமிக்கப்படுவார் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். 

மேலும் போரின் ஓராண்டு நிறைவை ஒட்டி உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்ய படைகள் தாக்குவதற்கு திட்டமிட்டுள்ள நிலையில், அமைச்சர்கள் மாற்றப்படுவதில் காலதாமதம் ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ukraine replaces defense minister amid war


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->