விமான சேவைக்கு விதிக்கப்பட்ட தடை.! அதிகரிக்கும் கொரோனாவால் அதிரடி முடிவெடுத்த அரசு.!   - Seithipunal
Seithipunal


கடந்த 2019 டிசம்பரில் சீனாவில் உருவாக்கிய கொரோனா நாடு முழுவதும் பரவியது. அத்துடன் வெளிநாடுகளுக்கும் பரவத் துவங்கியது. இதனால், உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் லட்சக்கணக்கான உயிர்கள் பலியாகின. தொடர்ந்து, கொரோனவைரஸ் இந்தியாவுக்குள் நுழைந்தது  கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இந்திய மற்றும் தமிழக அரசுகள்பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டன. 

ஆனால், ஒரு கட்டத்தில்  கொரோனாவால் கட்டுப்படுத்த முடியாமல் ஊரடங்கு அறிவித்தன. பின்னர், சிறிது சிறிதாக தளர்வுகள் அமலுக்கு வந்தது. இத்தகைய சூழலில், தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கம் உச்சமடைய துவங்கியுள்ளது. 

உருமாறிய கொரோனாவும் தனது ஆட்டத்தை ஆரம்பித்து விட்டது. இந்த நிலையில், தற்போது கருணா பரவல் அதிகமாக இருப்பதால் மீண்டும் ஊரடங்கு போடப்படுமா என்பது குறித்து சமீபத்தில் பிரதமர் மோடி பேசினார். மீண்டும் ஊரடங்கு என்று யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என்று அவர் கூறினார்.

தமிழகத்தில் இரவு நேரங்களில் மட்டும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இத்தகைய நிலையில், தற்போது ஐக்கிய அரபு அமீரகம் இந்தியா மற்றும் துபாய் இடையே விமான சேவைக்கு 10 நாட்கள் தடை விதிப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UAE quit Flight service India to Dubai temporary 


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->