ரகசா புயல் தாக்கம்: தைவானில் 17 பேர் பலி: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு..!
Typhoon Rakshasa killed 17 people in Taiwan and affected 2 million people in China
ரகசா புயல் தாக்கத்தில் சீனா, ஹாங்காங் மற்றும் தைவான் உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில் தைவானில் மட்டும் 17 பேர் உயிரிழந்தனர்.
கடந்த 22-ஆம் தேதி முதல் தைவானில் ரகசா புயல் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. குறித்த புயல் சீனாவின் தெற்கு கடலோரப் பகுதியையும், ஹாங்காங்கையும் நோக்கி நகர்ந்து வருகிறது. தொடர் கனமழை பெய்து வருவதால், தைவானில் உள்ள ஏரி ஒன்றில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், பாலம் ஒன்றும் சேதமடைந்துள்ளது.
அத்துடன், ஏரியில் இருந்து வெளியேறிய நீர் குவாங்பு நகருக்குள் புகுந்தத்தில் 17 பேரை காணவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், 100க்கும் மேற்பட்டோரை காணவில்லை என அச்சம் வலியிடப்பட்டுள்ளது. புயல் பாதிப்பால் ஹாங்காங்கின் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து, செல்லும் விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ரகசா புயல் சீனாவில் மணிக்கு 241 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது. இதனால், குவாங்டாங் மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, 20 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதன்காரணமாக கடந்த 48 மணிநேரத்தில் சீனாவில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், சுமார், 1.40 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த ரகசா புயல் இந்த ஆண்டு உலகின் வலிமையான புயலக உருவாகியுள்ளது. இது தென் சீனக் கடலில் பல நாட்களாக தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Typhoon Rakshasa killed 17 people in Taiwan and affected 2 million people in China