வியூஸை அதிகரிக்க விமானத்தை வெடிக்கச் செய்த பிரபல யூடியூபருக்கு 20 ஆண்டுகள் சிறை.!! - Seithipunal
Seithipunal


வியூஸை அதிகரிக்க விமானத்தை வெடிக்கச் செய்த பிரபல யூடியூபருக்கு 20 ஆண்டுகள் சிறை.!!

பிரபல சமூக வலைத்தளமான யூடியூப்பில் ஏரளாமானோர் தங்களுக்கென்று ஒரு சேனல்களை ஆரம்பித்து அதில் பல வீடியோக்களை பதிவிடுகின்றனர். அந்த வீடியோக்களில் வியூஸ் அதிகரிப்பதற்காக பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

அந்த வகையில், பிரபல யூடியூபர் ஒருவர் வியூஸை அதிகப்படுத்துவதற்காக தனது விமானத்தை வேண்டுமென்றே வெடிக்கச் செய்துள்ளார். இதனால், அவருக்கு இருபது ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக  தனியார் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளதாவது:- "டிரெவர் ஜேக்கப் என்ற வாலிபர் தனது யூடியூபில் வியூஸை அதிகரிப்பதற்காக வேண்டுமென்றே தனது விமானத்தை வெடிக்க செய்துள்ளார். இந்த வீடியோவை இதுவரைக்கும் சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்

இதனால், அவர் விசாரணைக்கு உட்பட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், இவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும். டிரெவர் செய்த செயலுக்காக அவருக்கு வழங்கப்பட்டு இருந்த தனியார் விமானத்தை இயக்கும் உரிமத்தை அமெரிக்க விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. 

இதேபோல், இவர் கடந்த டிசம்பர் மாதம் 2021 ஆம் ஆண்டு கலிஃபோர்னியாவில் உள்ள லாஸ் பட்ரெஸ் காட்டுப்பகுதியில் சிறிய என்ஜின் கொண்ட விமானத்தை வேண்டுமென்றே வெடிக்க செய்து அதனை, 'நான் எனது விமானத்தை வெடிக்கச் செய்தேன்' என்ற தலைப்பில் யூடியூபில் வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ பார்வையாளர்களை ஈர்த்ததோடு, சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பான விசாரணையும் நடைபெற்று வருகிறது" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

twenty years jail penalty to youtuber for explossion flight in america


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->