புதின் மற்றும் கிம் கூட்டணி மீது டிரம்பின் கடும் எச்சரிக்கை...!
Trumps strong warning against Putin and Kim alliance
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்கள், சீனாவின் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பில் ரஷ்ய அதிபர் 'விளாடிமிர் புதின்' மற்றும் வடகொரிய அதிபர் 'கிம் ஜாங் உன்' பங்கேற்ற நிகழ்ச்சியை விமர்சித்துள்ளார்.

டொனால்ட் டிரம்ப்:
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் இணையத்தில் பதிவிட்டதாவது,"சீனாவுக்கு வெளிநாட்டு படையெடுப்பாளர்களிடமிருந்து சுதந்திரம் கிடைத்ததா? அமெரிக்கா அளித்த ஆதரவும், அங்கே சிந்திய ரத்தத்தையும் சீன அதிபர் ஜின்பிங் நினைவுகூறுவாரா?
இது பதிலளிக்கப்பட வேண்டிய பெரிய கேள்வி. சீனாவின் வெற்றி மற்றும் பெருமைக்கான தேடலில் பல அமெரிக்கர்கள் தங்களின் உயிரைப் பலி வைத்தனர்.
அவர்களின் துணிச்சலும் தியாகமும் சரியாக மதிக்கப்பட வேண்டும் மற்றும் நினைவுகூறப்பட வேண்டும். அதே நேரத்தில், அதிபர் ஜின்பிங் மற்றும் சீனாவின் மக்களுக்கு சிறந்த, நீடித்த கொண்டாட்ட நாள் அமையட்டும்.
மேலும், அமெரிக்காவுக்கு எதிராக நீங்கள் சதி செய்யும்போது, புதின் மற்றும் கிம் ஜாங் உன்-க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Trumps strong warning against Putin and Kim alliance