மருந்து பொருட்களுக்கு 100 % வரி - ட்ரம்பின் அறிவிப்பால் அதிர்ச்சியில் இந்தியா.!!
trumph announce 100 percentage tax to indian medicines
அமெரிக்க நாட்டின் அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றது முதல் எரிசக்தி பயன்பாடு, குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு, அமெரிக்க குடியேற்ற கொள்கையில் மாற்றம், உலகின் பல்வேறு நாடுகளில் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு பயிற்சி உள்ளிட்ட திட்டங்களுக்காக அமெரிக்கா அளித்து வந்த நிதி உதவி நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார்.

அதுமட்டுமல்லாமல், இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்தது. இதனால், இந்தியாவில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், அக்டோபர் 1-ந்தேதி முதல் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதியாகும் மருந்து பொருட்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த வரி விதிப்பு நடவடிக்கையால் அமெரிக்காவுடனான வர்த்தகத்தை மிகவும் சார்ந்திருக்கும் உள்நாட்டுத் தொழில்களில் ஒன்றான இந்தியாவின் மருந்துத் துறை மிகவும் பாதிக்கப்படலாம் என்றுக் கருதப்படுகிறது.
English Summary
trumph announce 100 percentage tax to indian medicines