இஸ்ரேல் உடனான போரில் ஈரான் வெற்றி பெறாது: இஸ்ரேலை ஆதரித்து எச்சரிக்கை விடுத்துள்ள டிரம்ப்..! - Seithipunal
Seithipunal


ஈரான் அணுகுண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாக கூறி இஸ்ரேல் அந்நாட்டின் மீது போர் தொடுத்துள்ளது. ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு நாடுகளிலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஈரானின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த தாக்குதலில் இஸ்ரேலில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் இன்று ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் சேதமடைந்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் உடனான போரில் ஈரான் வெற்றி பெறாது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

 'ஜி7' நாடுகளின் உச்சி மாநாடு கனடாவின் கனனாஸ்கிஸ் என்ற இடத்தில் நேற்று தொடங்கியது. அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா ஆகிய 07 நாடுகளை உள்ளடக்கியது, 'ஜி7' அமைப்பு. நடப்பாண்டிற்கான, மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கலந்து கொண்டு பேசும் போது கூறியதாவது:

இஸ்ரேல் உடனான போரில் ஈரான் வெற்றி பெறாது என்றும், மிகவும் தாமதமாகிவிட்டதாகவும், இனியும் தாமதிக்காமல், ஈரான் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்றும், பதற்றத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பேசியுள்ளார்.

மேலும், அமெரிக்க நலன்கள் மீது எந்தவொரு தாக்குதல் நடத்தப்பட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றுஜி7 மாநாட்டில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Trump supports Israel and warns that Iran will not win a war with Israel


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->