2024 அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி படுதோல்வியை சந்திக்கும் - ட்ரம்ப்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சியின் சார்பில் 2-வது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிட்ட டிரம்ப்,  ஜனநாயக கட்சியின் ஜோபைடனிடம் தோல்வியை தழுவினார்.

தோல்விக்குப்  பிறகு முதல் முறையாக பொது மேடையில் பேசிய டிரம்ப், 2024- ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் மீண்டும் நான் போட்டியிடலாம் என்று கூறினார்.

டிரம்ப் மேலும் கூறுகையில், நாம் தொடங்கிய இந்த சிறப்பான பயணம் முடிவுக்கு வர வெகுதொலைவு உள்ளது. புதிய கட்சியை துவங்குவதில் விருப்பம் இல்லை.

பைடன் நிர்வாகம் மோசமாக இருக்கப்போகிறது என்பது நமக்கு தெரியும். ஆனால், எந்த அளவு மோசமாக இருக்கப்போகிறது என்பதை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. 2024 அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி படுதோல்வியை சந்திக்கும்” என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trump Says 2024 America Election Joe Biden Loss


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal