ரஷியா போரை நிறுத்த சம்மதிக்கவில்லை என்றால்... டிரம்ப் கடும் எச்சரிக்கை!
Trump gives a stern warning if Russia does not agree to stop the war
ரஷியா போரை நிறுத்த சம்மதிக்கவில்லை என்றால் மிக கடுமையான விளைவுகள் ஏற்படும். ஆம். கடுமையான விளைவுகள் இருக்கும். அது எப்படி இருக்கும் என நான் கூற வேண்டியிருக்காது. மிக கடுமையான ஒன்றாக இருக்கும் என டிரம்ப் கடும் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ரஷ்யா உக்ரைன் போர் நீடித்து வருகிறது .இருதரப்பிலும் பொதுமக்கள் ராணுவ வீரர்கள் என லட்சக்கணக்கானோர் உயிரிழந்து இருக்கின்றனர். சில பகுதிகளை ரஷ்யா கைப்பற்றி தொடர்ந்து போராடி வருகிறது .இந்த போரால் பலர் தங்கள் உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.
.மேலும் இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக டிரம்ப பதவியேற்றது முதல் ரஷ்யா உக்ரைன்போரை முடிவுக்கு கொண்டு வர பேசி வருகிறார். இந்த நிலையில் இரு நாடுகளுக்கான இடைவேளான ஒரே முடிவு கொண்டு மத்தியானம் செய்ய முடிவு எடுத்து ட்ரம் வருகின்ற 15ஆம் தேதி அதாவது நாளை ரஷ்ய அதிபர் புதின் ஜனாதிபதி ட்ரம்பை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
அமைதி ஒப்பந்தம் பெற்று இருவரும் நடத்துவார்கள் என சொல்லப்படுகிறது .இதனை அவரது சமூக வலை தளத்தில் பதிவிட்டு உள்ளார். இந்த நிலையில் ட்ரம்பு வெள்ளை மாளிகையில் பேசும் போது அதிபர் புதின் உடன் சந்திப்பு மற்றும் ஒப்பந்தம் ஏற்படுமா இல்லை என்பது தமக்கு தெரிந்து விடும் என்று கூறியுள்ளார் .
இந்த கூட்டம் நல்ல முறையில் நடக்கப் போகிறது என்றும் இன்னும் முன்னேறி செல்வோம் ஒப்பந்தம் ஏற்படுத்துவோம் மிகப்பெரிய போர் ஒப்பந்தம் ஏற்படும் அதனை உடனடியாக பார்க்க நான் விரும்புகிறேன் என்று கூறினார். நான்காண்டுகளில் முதன் முறையாக இரு தலைவரும் நேருக்கு நேர் சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளனர். மேலும் உக்ரேனுக்கு எதிராக போரை ரஷ்யா நிறுத்திக் கொள்ள ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ட்ரம்ப் எச்சரித்தார் .புதின் மற்றும் ஜலன்ஸ்கி பங்கேற்கும் முத்தரப்பு கூட்டத்திற்கான சாத்தியம் பற்றியும் அவர் குறிப்பிட்டு பேசினார் ஆக்கப்பூர்வமாக இந்த சந்திப்புகள் நடைபெறும் மற்றும் அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Trump gives a stern warning if Russia does not agree to stop the war