அபாரதத்துடன் வெளியில் வந்த தமிழக மீனவர்கள் - இலங்கை அரசு அதிரடி.!! - Seithipunal
Seithipunal


தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த கைது சக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையிலும், இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் தொடர்ந்து நடந்து கொண்டு தான் வருகிறது.

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து 61 நாட்கள் கழித்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து வருகின்றனர். கடந்த 55 நாட்களில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம், வவுனியா சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், சமீபத்தில் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை தலா ரூ.1.75 லட்சம் அபராதம் விதித்து நிபந்தனைகளுடன் இலங்கை மன்னார் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. மேலும் இந்த அபராதத்தை கட்டத் தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

srilanga government released tn fishermans with fine


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->