டெபாசிட் இழந்த ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி! சொந்த தொகுதியிலேயே இந்த நிலைமையா...?
YSR Congress Party loses deposit situation own constituency
ஆந்திரா மாநிலத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சொந்த தொகுதி புலிவேந்துலா.அங்கு நடைபெற்ற ஒண்டிமிட்டா உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி டெபாசிட் இழந்தது.

இதில் தெலுங்கு தேச கட்சியின் வேட்பாளர் மாரெட்டி லதா ரெட்டி 6,735 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். மேலும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் 700க்கும் குறைவான வாக்குகளைப் பெற்று டெபாசிட் இழந்து தோல்வி அடைந்தார்.
குறிப்பிடத்தக்க விதமாக சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு புலிவேந்துலாவிலுள்ள ஒண்டிமிட்டா உள்ளாட்சிக்கு தேர்தல் நடைபெற்றுள்ளது. இதற்கு முன்பு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி இந்த தொகுதியில் போட்டியின்றி வெற்றி பெற்று வந்துள்ளனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.இதற்கு பலவிதமான விமர்சனங்களும் இணையதளத்தில் பரவி வருகிறது.
English Summary
YSR Congress Party loses deposit situation own constituency