திருடனின் நல்ல மனது! திருடிய நகையை திருப்பி வைத்து விட்டு கடிதத்தில் மன்னிப்பு...!
thiefs good heart He returned stolen jewelry and apologized letter
கடந்த 9 தினங்களுக்கு முன்பு, கேரளா மாவட்டத்தில் மேலபரம்பா பகுதியில் கணவருடன் பேருந்தில் சென்ற 'கீதா' என்ற பெண்ணின் தங்க செயின் திருடு போனது. இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார்.இந்த விவகாரம் குறித்து காவலர்கள் உள்ளூர் வாட்சப் குழுக்களில் செயின் பற்றிய அடையாளங்களை பகிர்ந்திருந்தனர்.

இந்த சூழ்நிலையில் வாட்ஸப்பில் கீதாவின் செயின் அவரது திருமண நகை என்ற தகவலையறிந்து மனம் வருந்திய திருடன் அதை திரும்ப ஒப்படைத்துள்ளான். மேலும், கீதாவின் வீட்டின் முன் திருடன் அந்த நகையுடன் ஒரு மன்னிப்பு கடிதத்தையும் வைத்து விட்டுச் சென்றுள்ளான்.
அந்த திருடனின் கடிதத்தில் எழுதியிருந்ததாவது,"இந்தச் செயின் என் வசம் வந்து 9 நாட்கள் ஆகின்றன. முதலில், நான் மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் நான் அதை கையில் வைத்திருந்த போதெல்லாம், எனக்கு ஒரு மோசமான உணர்வும், லேசான நடுக்கமும் ஏற்பட்டது.
அதை என்ன செய்வது என்று நீண்ட நேரம் யோசித்தேன். பிறகு அது திருமண நகை என்று ஒரு வாட்ஸ்அப் செய்தியைக் கவனித்தேன். என்னால் வேறு யாரும் வருந்துவதை நான் விரும்பவில்லை.என் அடையாளத்தையும் நான் வெளிப்படுத்த விரும்பவில்லை.
இவ்வளவு நாட்கள் அதை வைத்திருந்ததற்கும், உங்களுக்கு வலியை ஏற்படுத்தியதற்கும் மன்னிக்கவும்" என்று குறிப்பிட்டுள்ளான்.இது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.மேலும் இணையத்தில்," திருடனாக இருந்தாலும் இவன் நல்ல திருடனாக இருக்கின்றார்" என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
thiefs good heart He returned stolen jewelry and apologized letter