ச்சீ! காவல்துறையை நம்புவதைப் போன்ற அரசியல் பலகீனம் வேறு எதுவும் இல்லை...! சு. வெங்கடேசன்
There no political weakness trusting police S Venkatesan
சிபிஐ(எம்) கட்சி,கைது செய்துள்ளவர்களை விடுதலை செய்யவும்,தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளது.இது தொடர்பாக மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டதாவது, "இரவோடு இரவாக காவல்துறை நடத்திய 'அப்புறப்படுத்துதல்' முற்றிலும் சட்டத்திற்கு புறம்பான மனித உரிமை மீறல்.அதைக் கேள்வி கேட்க சென்றால் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக நம்பர் பிளேட் இல்லாத காவல் வாகனத்தில் ஏற்றி சுற்றிக்கொண்டே அலைந்தது நாகரீக சமூகம் வெட்கித் தலை குனிய வேண்டிய நடவடிக்கை.
அத்துமீறிய காவல் துறையினர் மீதும், அதற்கு உத்தரவிட்டவர்கள் மீதும் உடனடி நடவடிக்கை வேண்டும்.உரிமைகளுக்காக நடக்கும் போராட்டங்களை எதிர்கொள்ள காவல்துறையை நம்புவதைப் போன்ற அரசியல் பலகீனம் வேறெதுவுமில்லை" என்று தெரிவித்துள்ளார்.
இது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
English Summary
There no political weakness trusting police S Venkatesan