ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தால் உயிருக்கு ஆபத்து - மிரட்டல் விடுத்த பயங்கரவாதி.! - Seithipunal
Seithipunal


19 ஆம் தேதி நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டிக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தால் உங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று பயங்கரவாதி ஒருவர் வேடுவ மூலம் மிரட்டல் விடுத்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வருகிற 19-ம் தேதி இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இந்த நிலையில், இந்த கிரிக்கெட் தொடர்பாக காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், "நவம்பர் 19-ம் தேதி சீக்கியர்கள் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். அன்றைய தினம் சர்வதேச முற்றுகை நடைபெற உள்ளது.

நவம்பர் 19ம்தேதி, ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தால், உங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும். அன்றைய தினம் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டு, அதன் பெயர் மாற்றப்படும்" என்று வீடியோ மூலம் மிரட்டல் விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Traveling on Air India flight threatening terrorist threat


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->