குடை இல்லாமல் வெளியே போகாதீங்க...! தமிழகத்தின் 14 மாவட்டங்களை வெளுத்து வாங்கப்போகும் கனமழை...!
Dont go out without umbrella Heavy rains going drench 14 districts Tamil Nadu
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை தீவிரம் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக பல மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இன்று ஈரோடு, நாமக்கல், கரூர்,நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் சூழல் நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதேபோல் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களிலும் கனமழை தாக்கம் அதிகமாக இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த 14 மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகள், மலைப்பகுதிகள் மற்றும் நீர்நிலைகள் அருகே வசிப்போர் கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, நாளை தமிழ்நாட்டில் மழை பரவல் மேலும் விரிவடையும் என கணிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் 27 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர்,நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கனமழை தாக்கம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதைத் தொடர்ந்து மழை நிலவரத்தை கவனத்தில் கொண்டு, தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்கவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
English Summary
Dont go out without umbrella Heavy rains going drench 14 districts Tamil Nadu