வண்டலூர் பூங்காவுக்குப் போறீங்களா...? டிக்கெட் எடுக்க வேண்டாம்...! - முதல்வர் விஜய் பிறந்தநாளுக்கு அரசு தந்த சூப்பர் ஆஃபர்...! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜயின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு, பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய உயிரியல் பூங்காக்களில் இரண்டு நாட்களுக்கு இலவச நுழைவு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் வரும் ஜூன் 21 மற்றும் ஜூன் 22 ஆகிய இரு தினங்களில், மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் கட்டணமின்றி உயிரியல் பூங்காக்களை பார்வையிடும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.

இதுகுறித்து வனத்துறை அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,"தமிழ்நாடு அரசின் வனத்துறை நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வண்டலூர் உயிரியல் பூங்கா, மேலூர் அமிர்தி உயிரியல் பூங்கா மற்றும் சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா ஆகிய மூன்று இடங்களிலும் இந்த சிறப்பு சலுகை அமல்படுத்தப்படுகிறது.

முதல்வர் ஜோசப் விஜயின் 52வது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் எந்தவித நுழைவுக் கட்டணமும் இன்றி இந்த பூங்காக்களை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள். இருப்பினும், வழக்கமான நடைமுறையின்படி இணையதளம் வாயிலாக நுழைவுச்சீட்டை முன்பதிவு செய்து பெற வேண்டும்.

இந்த இலவச அனுமதி திட்டத்திற்கான இரு நாட்களின் மொத்த நுழைவுக் கட்டணச் செலவு சுமார் ரூ.70 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செலவினை தவெக சார்பிலும், வனத்துறை அமைச்சரான நானும், எனது சகோதரர்களும், குடும்ப அறக்கட்டளையும் இணைந்து அரசுக்கு முழுமையாக வழங்க உள்ளோம்.

குழந்தைகள் எங்களுக்குப் பொக்கிஷம் போன்றவர்கள். அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியை காண்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கம். குடும்பத்துடன் வந்து குழந்தைகள் மகிழ்ச்சியாக நேரத்தை கழிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள் மற்றும் குடும்பங்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Are you going Vandalur Park Dont buy tickets Super offer given by government Chief Minister Vijay birthday


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->