தமிழகத்தில் விசிக இன்றி ஆட்சி அமைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது; திருமாவளவன் பெருமிதம்..! - Seithipunal
Seithipunal


மதுரையில் முன்னாள் விசிக நிர்வாகி முடக்காத்தான் பாண்டி நினைவேந்தல் நிகழ்ச்சியில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி பங்கேற்றார். அப்போது இன்றைக்கு தமிழகத்தில் விசிக இன்றி ஆட்சி அமைக்க முடியாது என்ற அளவுக்கான சூழல் உருவாகி இருப்பதை எண்ணிப் பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்படி நமது இயக்கம் (விசிக) வளர்ந்து இருக்கும் இந்த நேரத்தில் நமது இயக்க போராளிகள் முடக்காத்தான் பாண்டி, தம்பி பாவரசு ஆகியோர் நம்மிடமில்லை என்பது கவலை அளிக்கிறது என்றும், அவர்கள் ஆற்றி பங்களிப்பை நினைவுகூர்ந்து அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன் என்று சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், தற்போது பல்வேறு நிகழ்ச்சிகள் காரணமாக உடனே சென்னைக்கு செல்லவேண்டியுள்ளது என்றும், ஜூலை 05-ஆம் தேதி சென்னையில் நடக்கும் விசிகவின் விருது வழங்கும் விழாவில் முன்னணி பொறுப்பாளர்கள் தவறாமல் பங்கேற்கவேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

அதேப்போன்று ஆகஸ்ட் 17-இல் தனது பிறந்த நாளை தமிழர் எழுச்சி நாளாக கொண்டாடஉள்ளதாகவும், இவ்வாண்டு தமிழ் தேசிய எழுச்சி மாநாடாக நடக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

அப்போது மண்டல வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு எல்லோரையும் நேரில் சந்திக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், மண்ணுரிமை போராளிகள் நினைவு நாள் பூதக்குடியில் ஏற்பாடு செய்திருந்த போதிலும், அதில் பங்கேற்க முடிய வில்லை என்று தெரிவித்துள்ளார். அந்த நிகழ்வில் கட்சியின் முன்னணி பொறுப்பாளர்களான பாவளன், கனியமுதன், முத்துப்பாண்டி, செல்லப்பாண்டி, கண்ணதாசன், ரவிக்குமார் உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள் பங்கேற்பார்கள் என்றுகூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thirumavalavan proudly states that a situation has emerged in Tamil Nadu where a government cannot be formed without the VCK


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->