பண வெறி பிடித்த அண்ணன்...! சாம்பலான தம்பியின் கார்...! - சொத்து தகராறில் தம்பியின் காரை கொளுத்தி நாசமாக்கிய அண்ணன்...!
brother who obsessed money His brother car ashes brother who burned and destroyed his brother car property dispute
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகேயுள்ள கங்கணான்குளம் பகுதியில் குடும்ப சொத்து தகராறு தீவிரமடைந்து, அதிர்ச்சிகரமான சம்பவமாக மாறியுள்ளது. சொத்து பிரச்சினை காரணமாக தம்பியின் காருக்கு தீ வைத்து எரித்த அண்ணனை காவலர்கள் கைது செய்துள்ளனர்.கங்கணான்குளத்தைச் சேர்ந்த முத்து வாடகை கார் ஓட்டுநராக பணியாற்றி வருவதுடன், சொந்தமாகவும் ஒரு கார் வைத்துள்ளார்.

வழக்கம்போல் நேற்று இரவு தனது காரை வீட்டு முன்பாக நிறுத்திவிட்டு உறங்கச் சென்றுள்ளார்.சில நேரம் கழித்து வெளியே இருந்து தீப்பற்றும் சத்தம் மற்றும் பரபரப்பு கேட்டு முத்து பதறியபடி வெளியே ஓடி வந்துள்ளார். அப்போது அவரது கார் முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த காட்சி அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
உடனடியாக சேரன்மகாதேவி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர்.
எனினும், கார் முழுமையாக தீக்கிரையாகி சேதமடைந்தது.இந்த சம்பவம் குறித்து சேரன்மகாதேவி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையை தொடங்கினர்.விசாரணையின் ஒரு பகுதியாக, முத்து வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது அதிர்ச்சி தரும் உண்மை ஒன்று வெளிச்சத்துக்கு வந்தது.
முத்துவின் அண்ணன் பாபநாச பெருமாளே காருக்கு தீ வைத்திருப்பது பதிவாகியிருந்தது.மேலும் விசாரணையில், முத்துவுக்கும் அவரது அண்ணன் பாபநாச பெருமாளுக்கும் இடையே நீண்ட நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. முத்துவுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் பாபநாச பெருமாள் செங்கல் சூளை நடத்தி வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த நிலத்தையும் சொத்தையும் உரிய முறையில் பிரித்து தருமாறு முத்து பலமுறை கேட்டிருந்தும், அதற்கு பாபநாச பெருமாள் சம்மதிக்கவில்லை என தெரிகிறது. இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் உறவினர்கள் தலையிட்டு இன்று பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கு முன்பே ஆத்திரத்தில் பாபநாச பெருமாள் கடுமையான முடிவெடுத்துள்ளார்.
நேற்று இரவு முத்துவின் வீட்டிற்கு வந்த அவர், வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த விலை உயர்ந்த கார் மீது கேனில் கொண்டு வந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். சில நொடிகளில் கார் முழுவதும் தீப்பற்றி எரிந்தது விசாரணையில் உறுதியாகியுள்ளது.
இதையடுத்து, சம்பவத்தில் தொடர்புடைய பாபநாச பெருமாளை சேரன்மகாதேவி காவலர்கள் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப சொத்து பிரச்சினை இவ்வளவு மோசமான நிலைக்கு சென்றிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
brother who obsessed money His brother car ashes brother who burned and destroyed his brother car property dispute