கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் சோகம்; 4 பேர் பலி! 
                                    
                                    
                                   Tragedy at Christmas CelebrationFour killed
 
                                 
                               
                                
                                      
                                            அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு தயாரானபோது, விஷ வாயு தாக்குதலில் வீட்டில் இருந்த 4 பேர் பலியாகி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷைர் மாகாணத்தில் வேக்பீல்டு நகரில் வீடு ஒன்றில் 4 பேர்  கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு வராத நிலையில், சந்தேகத்தின்பேரில் மற்ற குடும்ப உறுப்பினர்கள் போலீசாரை தொடர்பு கொண்டு இதுபற்றி விசாரிக்க கோரியுள்ளனர்.உடனடியாக போலீசார் வந்து பார்த்தபோது, 4 பேரும்  
பலியாகி கிடந்த அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்துள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த நியூ ஹாம்ப்ஷைர் மாகாண தீயணைப்பு துறை தலைவர் சீன் டூமீ கூறும்போது, போலீசாருக்கு இந்த சம்பவம் பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதில், பலியாகி கிடந்தத 4 பேரில்  2 பேர் வயது முதிர்ந்தவர்கள் ஆவர். தற்செயலாக நடந்த சம்பவத்தில் இவர்கள் உயிரிழந்து இருக்க கூடும் என அதிகாரிகள் நம்புகின்றனர். குளிர்காலத்தில் வெப்பநிலை வெகுவாக குறைந்து உள்ளது என்றும் . இதனால், வெப்பமூட்டும் சாதனங்களை அவர்கள் பயன்படுத்தியபோது, அதில் இருந்து கார்பன் மோனாக்சைடு விஷ வாயு கசிந்து அவர்கள் பலியாகி இருக்க கூடும் என்று கூறப்படுகிறது.
அவர்களின் பிரேத பரிசோதனை முடிவிலேயே உண்மையான காரணம் என்னவென்று தெரிய வரும்.எனினும், உயிரிழந்தவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீசார் வெளியிடப்படவில்லை. 
                                     
                                 
                   
                       English Summary
                       Tragedy at Christmas CelebrationFour killed