82 நிமிடங்கள் நீடிக்கும் முழு சந்திர கிரகணம்! வெறும் கண்களால் பார்க்கலாம்! எந்த தேதியில் தெரியுமா? - Seithipunal
Seithipunal


சந்திரனின் மீது பூமியின் நிழல் விழும் போது ஏற்படும் வானியல் நிகழ்வுதான் சந்திர கிரகணம். சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வந்தால்தான் இது நிகழும். குறிப்பாக, பவுர்ணமி தினத்தில்தான் சந்திர கிரகணம் சாத்தியமாகிறது.

அதன்படி, வருகிற 7 ஆம் தேதி இந்த அபூர்வ நிகழ்வு நடைபெறுகிறது.இரவு 9.57 மணிக்கு சந்திரன் பூமியின் நிழலில் நுழையத் தொடங்கும்.11.01 மணி முதல் நள்ளிரவு 12.23 மணி வரை முழு கிரகணம் நீடிக்கும். (மொத்தம் 82 நிமிடங்கள்).அதிகாலை 1.27 மணிக்கு பகுதி கிரகணம் முடிவடையும்.2.25 மணிக்கு புறநிழல் பகுதியையும் விட்டு சந்திரன் வெளியேறும்.

முழு கிரகணம் நேரத்தில் சந்திரன் மறைந்துவிடாது; மாறாக, அடர் சிவப்பு நிறத்தில் வானில் தெரியும். இது "பிளட் மூன்" என்று அழைக்கப்படும் அழகிய தோற்றமாகும்.

சூரியனிடமிருந்து வரும் ஒளி 7 நிறங்களைக் கொண்டது. இதில் சிவப்பு நிற ஒளி அலைநீளம் அதிகமுள்ளதால் வளிமண்டலத்தில் குறைவாக சிதறுகிறது. அதே சமயம், பூமியின் வளிமண்டலத்தை வளைந்து கடந்து சந்திரனின் மீது விழுகிறது. இதனால் சந்திரன் சிவப்பாக ஒளிர்கிறது.

வானம் தெளிவாக இருந்தால், இந்தியா முழுவதும் இந்த சந்திர கிரகணத்தை கண்கொள்ளாக் காட்சியாக காண முடியும்.இதை பார்ப்பதற்கு கண்ணாடிகள் அல்லது கருவிகள் தேவையில்லை. வெறும் கண்களால் பாதுகாப்பாக ரசிக்கலாம்.

இந்த இயற்கை நிகழ்வால் உடல் நலத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அறிவியல் பலகை மாநில ஒருங்கிணைப்பாளர் பா. ஸ்ரீகுமார் தெரிவித்துள்ளார்.அதாவது, செப்டம்பர் 7-ந் தேதியின் இரவு வானம் நம்மை அனைவரையும் சிவப்பு சந்திரனின் மாயாஜாலத்தில் மூழ்கடிக்க இருக்கிறது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Total lunar eclipse lasting 82 minutes Can be seen with the naked eye Do you know on which date


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->