சவூதி அரேபியாவில் சோகம்: ராட்டினம் உடைந்து விழுந்து விபத்து: 03 பேர் கவலைக்கிடம், 23 பேர் காயம்..!
Three people in critical condition and 23 injured in Saudi Arabia park accident
சவூதி அரேபியாவில் பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினம் திடீரென உடைந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன் போது 23 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், 03 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சவுதி அரேபியாவின் தாயிஃப் அருகே உள்ள ஹடா பகுதியில் உள்ள கிரீன் மவுண்டன் பூங்காவில், ‘360 டிகிரி சவாரி’ செயல்பாட்டில் இருந்தபோது தரையில் சரிந்து விழுந்து விபத்து நடந்துள்ளது.இதில் சுமார் 40 பேர் பயணித்துள்ளனர். குறித்த ராட்டினம் திடீரென வேகம் அதிகரித்த நிலையில், ராட்டினத்தின் மையக் கம்பம் பாதியாக உடைந்துள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த 23 பேரும் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட்டுள்ளனர். உடனடியாக பாதுகாப்புப் படையினரும் அவசரகால மீட்புப் பணியாளர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளைத் தொடங்கியுள்ளனர். இந்த விபத்தில் சவாரி பழுதடைந்ததற்கான காரணம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவசர விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Three people in critical condition and 23 injured in Saudi Arabia park accident