உலக வரலாற்றில் ஆபத்தான காலம் இது! பூமி நிலப்பரப்பில் 7-8% காலி ஆகும்! அச்சத்தை ஏற்படுத்தும் பாபா வங்கா கணிப்பு! - Seithipunal
Seithipunal


பல்கேரியாவைச் சேர்ந்த முன்னாள் கணிப்பாளர் பாபா வங்காவின் 2026ஆம் ஆண்டுக்கான கணிப்புகள் தற்போது வெளியாகி, உலக நாடுகளுக்கே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. 1996ஆம் ஆண்டு இறந்துவிட்ட பாபா வங்கா, அதற்கு முன்பே பல ஆண்டுகளுக்கான முக்கிய நிகழ்வுகளை எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

பார்வையை இழந்த பின்னும், எதிர்கால நிகழ்வுகள் அவருக்கு மனக்காட்சியாக தோன்றியதாக பாபா வங்கா தெரிவித்திருந்தார். “இந்த சக்தி கடவுளால் எனக்கு வழங்கப்பட்டது” என அவர் கூறியிருந்ததோடு, 5079ஆம் ஆண்டுவரை நடைபெறும் நிகழ்வுகளை எழுதி வைத்துவிட்டார் என்றும் நம்பப்படுகிறது.

இதுவரை அவர் கணித்துள்ள பல நிகழ்வுகள் துல்லியமாக நிகழ்ந்துள்ளன. அதில் 9/11 தாக்குதல், இளவரசி டயானாவின் மரணம், 2004 சுனாமி, அமெரிக்க அதிபராக ஒபாமாவின் தேர்வு போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இந்நிலையில் 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் முக்கியமான கணிப்புகள்:

பெரும் இயற்கை சீற்றங்கள்: பூகம்பங்கள், எரிமலை வெடிப்பு மற்றும் கடுமையான வானிலை மாற்றங்கள் ஏற்படவுள்ளதாக அவர் கணித்துள்ளார். இதனால் பூமியின் 7–8% நிலப்பரப்புகள் பாதிக்கப்படலாம் எனவும், இது மனித வாழ்வுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பாக அமையும் என்றும் கூறப்படுகிறது.

உலகப் போர் அபாயம்: இந்தியா–பாகிஸ்தான், ஈரான்–இஸ்ரேல், சீனா–தைவான், ரஷ்யா–அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இடையே பதட்டம் அதிகரிக்கிறது. பாபா வங்கா, 2026ஆம் ஆண்டில் ஒரு பெரிய உலகப் போர் வெடிக்கக்கூடும் என கணித்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவின் உச்ச வளர்ச்சி: AI பெரும் வேகத்தில் வளர்ந்து வருவதால், மனித வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. 2026ஆம் ஆண்டில் AI ஒரு முக்கிய திருப்புமுனையில் இருக்கும் என அவர் கணித்துள்ளார்.

வேற்று கிரகவாசிகளுடன் தொடர்பு: 2026 நவம்பர் மாதத்தில் பூமிக்கு அருகே ஒரு பெரிய விண்கலம் நெருங்கும். இது வேற்று கிரகவாசிகள் தொடர்புக்கு வழிவகுக்கும் என்று பாபா வங்கா கணித்துள்ளார். அமெரிக்க ஹார்வர்டு பல்கலைக்கழக வானியற்பியலாளர் அவி லோப் தலைமையிலான ஆய்வுக் குழுவும் இதை ஆதரிக்கும் வகையில் 3I/ATLAS எனும் விண்வெளி பொருளை ஆராய்ந்து வருகின்றது.

பாபா வங்காவின் 2026 கணிப்புகள் இயற்கை, அரசியல், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் விண்வெளிச் சந்திப்புகள் என பல தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவை உண்மையாகுமா அல்லது உண்மையாக்குமா என்பது எதிர்காலத்தில் தெரியவரும். இருப்பினும், உலக நாடுகள் இந்த எச்சரிக்கைகளை பரிதாபமாக எடுத்துக்கொண்டு முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டிய அவசியம் இருப்பதாக நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

This is a dangerous time in world history 7 of the Earth land area will be empty Baba Vanga frightening prediction


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->