உத்தரகாண்ட் மேகவெடிப்பு: வெள்ளத்தில் சிக்கிய 130 பேர் மிட்பு!
Uttarakhand cloudburst 130 people stranded in flood
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாஷியில் ஏற்பட்ட பெரும் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கிய 130 பேர் மிட்பு என மாநில முதல்-மந்திரி புஷ்கர் சிங் தகவல் தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாஷி மாவட்டத்தில் ஹர்சிலுக்கு அருகிலுள்ள தாராலி பகுதியில் நேற்று திடீரென மேகவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது . இதனால் அங்கு கீர் கங்கா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் இந்த வெள்ளப்பெருக்கில் அங்குள்ள கட்டிடங்கள் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதாவும், மண்ணில் பலர் புதையுண்டதாக முதல் கட்ட தகவல் வெளியானது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து உள்ளூர் காவல்துறை, எஸ்.டி.ஆர்.எப், ராணுவம் மற்றும் தீயணைப்புப் படைகளின் மீட்புக் குழுக்கள் அங்கு தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்த வெள்ளம் தொடர்பான நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அதில் பாய்ந்து வரும் வெள்ளத்தில் சிக்கி குடியிருப்புகள் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் பெரும் மேக வெடிப்பால் ஒரு கிராமமே மூழ்கிய சம்பவத்தில் இதுவரை 17 பேர் பலியாகி உள்ளதாகவும்,பலர் மாயமாகி உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று முதற்கட்ட தகவல் வெளியானது,
தற்போது பெய்து வரும் இந்த பருவமழையால் உத்தரகாண்டில் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இரவு முழுவதும் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, ருத்ரபிரயாகில் உள்ள மலைப்பகுதியில் இருந்து விழுந்த இடிபாடுகள் மற்றும் பாறைகளுக்கு அடியில் இரண்டு கடைகள் புதைந்துள்ளதாக மாநில அவசர செயல்பாட்டு மையம் தெரிவித்தது.
மேகவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, உத்தரகாண்ட் மாநில முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமியை தொடர்பு கொண்டு, அங்குள்ள நிலை குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். மேலும் மத்திய அரசு சார்பில் மீட்புப் பணிகளுக்கான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உறுதியளித்துள்ளார்.
இதற்கிடையில், அவசரகால கட்டுப்பாட்டு அறைக்கு சென்ற புஷ்கர் சிங் தாமி, அங்கு நடைபெறும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து இதுவரை 130-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், தொடர்பு மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
English Summary
Uttarakhand cloudburst 130 people stranded in flood