20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் - தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு.!!
tamilnadu cm mk stalin say laptop provide to 20 lakhs students
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் உதவிப் பொறியாளர்கள், நகரமைப்பு அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு பணி இடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள 2,538 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அதன் பின்னர் இந்த விழாவில் பேசிய அவர் தெரிவித்துள்ளதாவது:-
"தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி பெரும் உச்சத்தை தொட்ட மகிழ்ச்சியான செய்தியை கூறுகிறேன். அதாவது வளர்ச்சி விகிதம் 11.19% என மத்திய அரசின் திருத்தப்பட்ட மதிப்பீடு கூறுகிறது
சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் இறுதியாக இரட்டை இலக்கம் 11.15%ஆக இருந்தது. இந்த சாதனை பல நெருக்கடி, அவதூறுகளை கடந்து படைத்திருக்கிறோம். இது எனக்கான தனிப்பட்ட வெற்றி மட்டுமில்லை. கூட்டாக பெற்ற வெற்றி.

திராவிட மாடல் ஆட்சிக்கான நற்சான்றிதழ் பத்திரம் தான் இந்த பொருளாதார வளர்ச்சி. இத்துடன் ஓய்ந்துவிடாமல் இந்த வளர்ச்சியை திராவிட மாடல் 2.0 ஆட்சியிலும் தொடருவோம்
நேற்று இரவில் இருந்து இது தான் Talk of The Town; Talk of The Nation என்றே சொல்லலாம். திமுக ஆட்சியில் தான் தமிழகத்தின் பொருளாதாரம் அதிகரிக்கிறது. கல்வி கொடுத்தால் மட்டும் போதாது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் நோக்கிலும் செயலாற்றுகிறோம்.
கடந்த நான்கு ஆண்டுகளில் TNPSC, TRB, MRB, TNUSRB உள்ளிட்ட தேர்வாணையங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் 1.08 லட்சம் பேருக்கு பணி நியமனங்கள் வழங்கியுள்ளோம்.
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 3.28 லட்சம் பேருக்கும், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறைகள் மூலம் 2.65 லட்சம் பேருக்கும் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளோம். கல்லூரியில் படிக்கும் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
tamilnadu cm mk stalin say laptop provide to 20 lakhs students